Rahu Peyarchi: ராகுவுடன், செவ்வாய் கூட்டணி..சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள்..நீங்கள் என்ன ராசி..?
Rahu-Sevvai Peyarchiராகுவுடன், செவ்வாய் கூட்டணி சேர்வதால் அங்காரக யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
rahu ketu peyarchi
ஜோதிடத்தின் பார்வையில், சனி கிரகம் மிகவும் மெதுவாக நகர்வது. இதற்கு அடுத்தபடியாக மெதுவாக நகர கூடிய நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் 1/2 ஆண்டுகளுக்கு பிறகு தனது ராசியை மாற்றுகிறது. தீய கிரகமாக கருதப்படும் ராகு, ஒன்றரை வருடத்திற்கு பிறகு 22 ஏப்ரல் 12ம் தேதியன்று மேஷ ராசிக்கு சென்றுள்ளார்.மேஷத்தில் ராகு இருக்கும்போதே, செவ்வாய் கிரகம் ஜூன் மாதம் மேஷ ராசிக்கு வந்துவிட்டார்.
rahu ketu peyarchi
ராகுவும் செவ்வாயும் மேஷத்தில் இணைந்திருப்பதால் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை அங்காராக யோகம் உண்டாகும். ஆகஸ்ட் 11ம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து செவ்வாய் வெளியேறுகிறார். அதுவரை குறிப்பிட்ட ராசிகள் சில கஷ்டத்தை அனுபவிக்க கூடும். யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
rahu ketu peyarchi
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள்,இந்த நேரத்தில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சண்டை போடுவதை தவிர்க்கவும், வாகனங்களில் செல்லும்போது நிதானமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நோயாளிகள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
rahu ketu peyarchi
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்படுவது நல்லது.
rahu ketu peyarchi
மிதுனம்:
இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் உறவு மோசமடையக்கூடும். கையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, நிதானமாக செயல்படுவது நல்லது. மிதுனம் ராசியில் பிறந்தவர்கள், குறிப்பாக பணியிடத்தில் கோபப்பட வேண்டாம். கோபத்தை நிதானமாக கையாள்வது நன்மை பயக்கும். எதிலும், முன் எச்சரிக்கை தேவை.