Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்...ஆகஸ்ட் 10 வரை இந்த மூன்று ராசிகளுக்கு இரட்டிப்பு ராஜயோகம்...
Sevvai Peyarchi 2022 Palangal: செவ்வாயின் இந்த ராசி மாற்றம், ஜூலை 2022 மற்றும் ஆகஸ்ட் 2022 இன் முதல் 20 நாட்கள் சிறப்பாக இருக்கும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
Sevvai Peyarchi 2022 Palangal:
செவ்வாய் பெயர்ச்சி 2022
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கிரகமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். திருமணம், தைரியம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் கிரகம் தற்போது மேஷ ராசியில் இருக்கிறார்.ஒருவரது, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.
Sevvai Peyarchi 2022 Palangal:
கடந்த ஜூன் 27 ஆம் தேதி மேஷ ராசியில் செவ்வாய் கிரகம் சஞ்சரித்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சுபமாக இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை பல வழிகளில் அற்புதமாக இருக்கும். அதன்படி, செவ்வாயின் இந்த ராசி மாற்றம், ஜூலை 2022 மற்றும் ஆகஸ்ட் 2022 இன் முதல் 20 நாட்கள் சிறப்பாக இருக்கும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
Sevvai Peyarchi 2022 Palangal:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பான பலனை தரும். உங்களுக்கு தொழிலில் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சி உங்கள் நிதிப் பக்கத்தை பலப்படுத்தும்.வாழ்வில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள். அதே சமயம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
Sevvai Peyarchi 2022 Palangal:
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் உள்ள செவ்வாய் கிரகம் மிகுந்த பலனைத் தருவார். தொழில் முன்னேற்றம் அடைவார்கள். வாழ்வில் புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள். பணி மாறுதல் உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும். தொழிலில் பதவி உயர்வு இருக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல நேரம் இதுவாகும்.
Sevvai Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பல்வேறு நன்மைகளை அள்ளி தருகிறார். உங்களுக்கு வேலையில் வெற்றி உண்டாகும். நீண்ட தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.மொத்தத்தில், இந்த நேரம் நன்றாக இருக்கும். அரசுத் துறை தொடர்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், வணிகம் தொடர்பாக பயணம் உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களுக்காக பவள ரத்தினத்தை அணியலாம்.