Budhan Peyarchi 2022: ஆகஸ்ட் 09ல் நிகழும் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு வாழ்கை அமோகமான இருக்கும்...
Budhan Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் மாதம் நிகழும் புதன் பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Budhan Peyarchi 2022
புதன் பெயர்ச்சி 2022
பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் மாதம் நிகழும் புதன் பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 09 ஆம் 2022 தேதி அன்று புதன் கிரகம் பெயர்ச்சி நடைபெறும். இதற்குப் பிறகு, புதன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். எனவே, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் புதனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு மட்டும் நேரடி பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Budhan Peyarchi 2022
கன்னி:
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை அடைவீர்கள். ஆகையால், வேலை செய்பவர்கள் பணியிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பைப் பெறலாம். வாழ்வில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். இதனுடன், அரசு வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறலாம். பணி நடை மேம்படும். பண வரவுகள் அமோகமாக இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல வேலை கிடைக்கும்.
Budhan Peyarchi 2022
மகரம்:
மகரம் ராசியில் பிறந்தவர்கள், சில புதிய வேலைகளைச் செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். எனினும், எந்த வித புதிய முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயப்லடுங்கள். உங்கள் ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.
Budhan Peyarchi 2022
சிம்மம்:
புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் அள்ளித் தரும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண யோகம் கைகூடும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் சில புதிய வேலைகளைச் செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.