Women's Day : சர்வதேச மகளிர் தினம் 2023: இப்படி வாழ்த்து சொல்லி அசத்துங்கள்..!
2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீங்களும் உங்கள் அன்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துகொள்ளும் வகையில், சில மெசேஜ்கள், சிந்தனைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வழங்கியுள்ளோம்.

பெண்களின் மகத்துவத்தை பறைசாற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியலில் அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பாலின சமத்துவத்துக்காக நடந்து வரும் போராட்டத்திற்கும் இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் என்பதே இந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருளாகும். பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்புகள், உரிமைகள் இருப்பதை உறுதிசெய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
சர்வதேச மகளிர் தினத்திற்கான சில விவரங்கள்:
புத்தகங்கள்:
பெண்களை ஊக்கப்படுத்தும் வகையிலான புத்தகங்களை குறிப்பிட்டு வாழ்த்து சொல்லாம். வேதாத்திரி மகரிஷி எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்ற புத்தகம் பொதுசிந்தனையாக அமையும். புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆங்கிலத்தில் எழுதிய Fearless Governance என்ற புத்தகத்தில் பெண் ஆளுமை, ஒழுக்கம், நேர்கொண்ட பார்வை வளங்கள் உத்வேகம் அளிப்பதாக அமையும். அந்நூல் ‘அச்சமற்ற ஆட்சி’ என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Happy womens day
சர்வதேச மகளிர் தினம் 2023 - வாழ்த்து செய்திகள்
சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்! உங்கள் பலம், தைரியம் மற்றும் கருணை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் தொடரட்டும்..
இன்று உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள் அளப்பறியது. அவற்றை எண்ணி நாங்கள் வியக்கிறோம், மதிக்கிறோம். முன்னேற்றம், சமத்துவம் என்பது பொதுவானது.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் வருகின்றனர் என்ற காலம் மாறி, ஒருவருக்கொருவர் சமம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த மாற்றம் உலகம் முழுவதும் வரட்டும், வளரட்டும்.
மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம்.. பெண்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
சர்வதேச மகளிர் தினம் 2023 - வேதாத்திரிய கவிதைகள்
1. "பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,"
2. "பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளோம்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,"
பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
சர்வதேச மகளிர் தினம் 2023 - அறிஞர்களின் கருத்துகள்
"எந்தவொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு அவளது தைரியமே." - எலிசபெத் கேடி ஸ்டாண்டன்
"உலகில் பயன்படுத்தப்படாத திறமைகளின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் பெண்கள்." - ஹிலாரி கிளிண்டன்
"பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தையும் முழு மனிதாபிமானத்தையும் அங்கீகரிப்பவர் தான் ஒரு பெண்ணியவாதி." - குளோரியா ஸ்டெய்னெம்
"முடிவுகள் எடுக்கப்படும் எல்லா இடங்களிலும் பெண்களே உள்ளனர். பெண்கள் விதிவிலக்கு என்று இருக்கக் கூடாது." - ரூத் பேடர் கின்ஸ்பர்க்