இந்தியன் டாய்லெட் - வெஸ்டர்ன் டாய்லெட்.. ரெண்டுல எது உடலுக்கு சிறந்தது தெரியுமா?
Indian Toilet Vs Western Toilet: நம்முடைய ஆரோக்கியத்திற்கு இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது சிறந்தது..
காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளிலும் மேற்கத்திய கழிப்பறைகள் (வெஸ்டர்ன் டாய்லெட்) அதிகரித்து வருகிறது. இந்திய கழிப்பறை வெகுசில வீடுகளில் தான் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதில் என்ன வகையான கழிப்பறை ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
முன்பெல்லாம் திறந்தவெளி கழிப்பிடத்தையே மக்கள் நம்பியிருந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் கழிப்பறைகள் கட்டும் நடைமுறை தொடங்கியது. கிராமத்திற்கு ஒரு கழிப்பறை, பின்னர் வீட்டுக்கு ஒரு கழிப்பறை என்றானது. கழிப்பறைகள் கட்டும் திட்டத்தையும் அரசு தொடங்கியது. ஆனால், வீட்டின் உட்புறம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, பெரும்பாலானோர் மேற்கத்திய பாணியில் வீட்டை அலங்கரிக்கத் தொடங்கினர். இப்படி மேற்கத்திய கழிப்பறைகளும் வந்துவிட்டன.
மேற்கத்திய கழிப்பறைகள் வசதியானவை என பரவலாக கூறப்பட்டாலும், அவற்றில் பல தீமைகளும் உள்ளன. ஆனால் இந்திய கழிப்பறைகள் பார்க்க வசதி குறைவாக தெரிந்தாலும் ஆரோக்கியத்திற்கு உதவுபவை. இந்தியக் கழிப்பறைகள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நம்மில் பலருக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும், அதை நாம் புறக்கணிக்கிறோம். இந்தியக் கழிவறைகளில் அமர்ந்து எழுவது கூட (Squatting Method) தினசரி உடற்பயிற்சியாகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கை, கால்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது.
இந்திய கழிப்பறைகளில் குந்தி அமர்தல், உங்கள் வயிற்றை அழுத்துகிறது. இது வயிற்றில் உள்ள உணவை இறுக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. மேற்கத்திய பாணி கழிப்பறையில் உட்கார்ந்துகொள்வதால் வயிற்றில் எந்த அழுத்தமும் ஏற்படாது. இந்திய கழிப்பறைகளை விட வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி மேற்கத்திய கழிப்பறைகளுக்கு டாய்லெட் பேப்பர் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்திய கழிவறைகளில் காகிதம் வீணாகாது.
இந்தியக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது கர்ப்பிணிகளுக்கு நல்லது. இந்தியக் கழிவறையில் உட்காரும்போது கர்ப்பிணியின் கருப்பையில் அழுத்தம் இருக்காது. இந்தியக் கழிவறையை தவறாமல் பயன்படுத்துவது கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஏற்பட உதவுகிறது.
இந்தியக் கழிப்பறைகளில் குந்துதல், நமது உடலில் உள்ள பெருங்குடலில் இருந்து மலத்தை முழுமையாக வெளியேற்ற உதவும். இதனால் மலச்சிக்கல், குடல் அழற்சி, பெருங்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பிற காரணிகளைத் தடுக்கலாம்
கால் வலியால் அவதிபடுபவர்கள் மேற்கத்திய கழிப்பறையை பயன்படுத்தலாம். உட்கார முடியாதவர்கள், மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது வசதியானது. ஆனால் இதன் தீமைகள் அதிகம். இது உடலில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். மேற்கத்திய கழிப்பறை இருக்கையைப் பயன்படுத்தும் போது சருமத் தொடர்பு இருப்பதால் கிருமிகள் எளிதில் பரவும். அதனால் இந்திய கழிப்பறையே சிறந்தது.
இதையும் படிங்க: வெறும் 2 நிமிடம் தான்.. தீராத மலச்சிக்கலும் நீங்கும்.. இரவில் இந்த ஒரு பழம் சாப்பிட்டு படுத்தால் போதும்!
இதையும் படிங்க: மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் செய்யவே கூடாத தவறுகள்.. மீறினால் விரதம் இருப்பதே வீண்..!