மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் செய்யவே கூடாத தவறுகள்.. மீறினால் விரதம் இருப்பதே வீண்..!
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சில தவறுகளை செய்தால் பலன் கிடைக்காது என்கின்றனர் ஜோதிடர்கள்.
வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று விரதம் இருப்பது விசேஷ பலன்களை தரும். அன்றைய தினம் பக்தியுடன் வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விரத்தின் முழுபலனை பெற விரும்புபவர்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சிவபெருமானின் அருள் கிடைக்கும். விரதமிருப்பவர்கள் என்ன தவறு செய்யக்கூடாது? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உணவில் கவனம்
சிவராத்திரியில் விரதம் இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவை சாப்பிட்டு தான் விரதம் இருக்க வேண்டும். பழங்கள், பால் இருக்கும் உணவை மட்டுமே சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என ஜோதிடர்கள் கண்டிப்பாகத் தெரிவிக்கிறார்கள். இதை உண்ணாமல் இறைச்சி, மது அல்லது பிற பொருட்களைக் கொண்டு விரதத்தைத் துறந்தால், சிவன் அருள் கிடைக்காது. ஆரோக்கியமும் முற்றிலும் பாதிப்பாகும்.
சுத்தம் முக்கியம்
இந்து மதத்தின் முக்கியமான அம்சம் தூய்மை தான். சிவராத்திரியில் சுத்தமாக இருக்க வேண்டும். விரதமிருப்பவர்கள் சிலர் நோன்பு திறக்கும் முன்பு தான் பல் துலக்கி, குளிப்பார்கள். இப்படி தூய்மை இல்லாமல் இருக்கக்கூடாது. இதனா; எதிர்மறையான விளைவுகள் வரும். காலையில் எழுந்து உடலை தூய்மைப்படுத்திவிட்டு, அதன் பிறகு தான் விரதம் தொடங்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
முறையான பூஜை
சிவராத்திரி என்பது அய்யன் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம். இந்நாளில் சிவபெருமானை நினைந்து பிரார்த்திப்பது, மந்திரங்களை சொல்வதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வேறு எந்த மந்திரத்தையும் அன்றைய தினம் சொல்ல வேண்டாம். இதனால் கூட உன்னத சிவனின் அருள் கிடைக்காது.
எதிர்மறை எண்ணங்கள்
சிவராத்திரி விரதம் இருக்கும்போது நேர்மறை எண்ணங்கள் தான் இருக்க வேண்டும். போட்டி, பொறாமை, பேராசை ஆகிய எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடாது. அதை விலக்கி வைப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தான் இறையச்சத்தைத் தடுக்கும் காரணிகள்.
விரதத்தை முன்கூட்டி முடிக்க வேண்டாம்!
விரதம் என்பது இந்து சமய சாஸ்திரங்களின்படி இருக்க வேண்டியது. உங்களுக்கு உடல்நலக்குறைவு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே நோன்பை முன்கூட்டியே கைவிட வேண்டும். பசிக்கிறது என்றோ பிற காரணங்களுக்காகவோ நோன்பை முன்கூட்டியே கைவிடக் கூடாது. அது உங்களுக்கும் குடும்பத்துக்கும் நல்லதல்ல. விரத பலன்களை குறைக்கும். உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும்.
விரத விதிகளை கடைபிடிக்காதது
சிவராத்திரி அன்று எப்போது விரதம் இருக்க வேண்டும்?என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும், விரதத்தை எப்போது எப்படி முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். அதை பின்பற்றினால் சிவனின் அருள் கிடைக்கும். இல்லையெனில் விரத பலன்களை முழுமையாக பெற முடியாது.
என்ன உண்ண வேண்டும்?
சனிக்கிழமை அன்று பகல், இரவில் ஆகாரம் ஏதும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் குடிக்கலாம். சிவ சிந்தனைகளை மனமுருகி ஜெபிக்க வேண்டும். உடல் நலன் கருதி முதியவர்கள், நோயாளிகள் பால், பழங்கள், அவல் ஆகியவை உண்ணலாம். அன்றைய தினத்தில் மௌன விரதம் இருந்து, மனதுக்குள் 'பஞ்சாட்சரம்' சொல்லலாம். அதில்லாமல் 'ஓம் நமசிவாய' என உச்சரித்து கொண்டிருந்தால் புண்ணிய பலன் பல மடங்கு கிடைக்கும்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: கனவுவில் பாம்பு வருதா? செல்வம் கொட்ட போகுது! சிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு