- Home
- Lifestyle
- கோதுமை மாவுல சீக்கிரம் வண்டு விழுதா? இப்படி சேமித்தால் '1' வருசமானலும் புதுசா இருக்கும்
கோதுமை மாவுல சீக்கிரம் வண்டு விழுதா? இப்படி சேமித்தால் '1' வருசமானலும் புதுசா இருக்கும்
கோதுமை மாவில் வண்டு, புழுக்கள் வராமல் இருக்க, வருட கணக்கில் பிரஷ்ஷாக இருக்க ஸ்டோர் செய்ய சூப்பரான டிப்ஸ் இங்கே.

Protect Flour From Insects
இப்போது எல்லாம் பலருடைய வீட்டில் இரவு சாப்பாடு சப்பாத்தி தான். இதனால் சிலர் கிலோ கணக்கில் கோதுமை மாவு வாங்கி ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் சில சமயம் அந்த மாவுகளில் பூழுக்கள், வண்டுகள் வந்துவிடும். வண்டுகள் புழுக்கள் இடமிருந்து மாவை பாதுகாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் மட்டும் போதும். வருசமானலும் மாவு கெட்டுப்போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
சல்லடை சலிக்கவும்
கோதுமை மாவில் ஏதேனும் வித்தியாசமான வாசனை அல்லது மாவு பார்ப்பதற்கு பழையது போல நீங்கள் உணர்ந்தால் அதை பிசைவதற்கு முன் சல்லடையில் சலித்து பாருங்கள். அதில் பூச்சிகள், வண்டுகள் புழுக்கள் இருந்தால் வெளியேறிவிடும்.
வெயிலில் காயவை
கோதுமை மாவை வாரத்திற்கு 1-2 நேரம் கண்டிப்பாக வெயிலில் காய வையுங்கள். ஈரப்பதம் இருந்தால் புழு, பூச்சிகள், வண்டுகள் வர வாய்ப்பு உள்ளன. எனவே மாவில் வண்டு அல்லது புழுக்கள் ஏதேனும் நீங்கள் பார்த்தால் உடனே வெயிலில் காய வைத்து விடுங்கள்.
உப்பு
வீட்டு மாவாக இருந்தாலும் சரி, கடை மாவாக இருந்தாலும் சரி அதில் 2-3 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் சிலந்தி அல்லது சிறிய வெள்ளைப் பூச்சிகள் பாதிப்பு குறையும். வேண்டுமானால் ஒரு சிறிய துணியில் உப்பு சேர்த்து கட்டி அதை மாவுக்குள் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மாவு நீண்ட நாள் கெட்டுப் போகாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
வேப்பிலை
ஒரு கைப்பிடி வேப்பிலையை லேசாக வெயிலில் உலர்த்தி பிறகு ஒரு துணியில் கட்டி கோதுமை மாவு இருக்கும் டப்பாவில் போடுங்கள்.
கிராம்பு
கோதுமை மாவு டப்பாவில் போடும் ஒரு சில கிராம்புகளை முதலில் போடுங்கள். பிறகு மாவு போட்ட பிறகு அதன் மேலேயும் கிராம்பு வைக்கவும். கிராம்புகளில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் மாவில் பூச்சிகள் உருவாவதை தடுக்கும்.
பெருங்காயம்
பெருங்காயத்தின் வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே கோதுமை மாவு இருக்கும் டப்பாவில் பெருங்காயத்தை போட்டு வைக்கவும். அதுபோல பூண்டின் தோலை உரித்து கூட மாவு டப்பாவில் போடலாம்.
எந்த டப்பாவில் சேமிக்கலாம்?
கோதுமை மாவை எப்போதுமே இயக்கு மற்றும் காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் தான் சேமிக்க வேண்டும். மேலும் அதில் பிரியாணி இலையை சேர்த்தால் மழைக்காலத்தில் பூச்சிகள் மாவில் வராது.
காலாவதி தேதியை சரிப்பார்
கோதுமை மாவை கடைகளில் வாங்கும் முன் முதலில் காலாவதி தேதியை சரி பார்க்க வேண்டும். அதுபோல 5-10 கிலோ மாவை ஒரே நேரத்தில் வாங்க வேண்டாம். தேவைக்கேற்ப மட்டும் வாங்கவும். இல்லையெனில் மாவு கெட்டுப் போகும். மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால், நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.