- Home
- Lifestyle
- ஒரு நொடி போதும்! வெள்ளை நிற ஸ்கூல் யூனிபார்மில் உள்ள விடாப்பிடி கறை நீங்க சிம்பிள் டிப்ஸ்
ஒரு நொடி போதும்! வெள்ளை நிற ஸ்கூல் யூனிபார்மில் உள்ள விடாப்பிடி கறை நீங்க சிம்பிள் டிப்ஸ்
வெள்ளை ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்கூலுக்கு போகும் பிள்ளைகள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வெள்ளை யூனிபார்ம் அணிவார்கள். அந்த நாள் வந்தாலே அம்மாக்களுக்கு பெரும் தலைவலி தான். ஏனெனில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தையின் யூனிஃபார்மில் அத்தனை கறைகள் இருக்கும். அதை கை வலிக்க வலிக்க துவைப்பது பெரும் பாடாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதல் நாள் மட்டும் தான் வெள்ளி யூனிபார்ம் வெளியாக இருக்கும் பிறகு பயன்படுத்த அதை நிறம் மாறி காணப்படும். சரி இப்போது வெள்ளை யூனிஃபார்மில் இருக்கும் விடாப்பிடியான கரையை சுலபமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளைத் துணிகளை எப்போதுமே தனித்தனியாக துவைக்க வேண்டும். மேலும், துவைப்பதற்கு நல்ல தரமான சோப்புகளை தான் பயன்படுத்த வேண்டும். ஆடைகளைத் துவைத்த பிறகு, வெயிலில் நன்கு காய வைத்து பிறகு மடித்து வைக்கவும்.
எலுமிச்சை தோல் மற்றும் ஷேவிங் கிரீம் : வெள்ளை யூனிபார்மில் இருக்கும் விடாப்பிடியான கறையை போக்க ஷேவிங் கிரீம் மற்றும் எலுமிச்சை தோல் உதவும். இதற்கு எலுமிச்சை தோலை நன்கு உலரத்தி பிறகு அதை பொடியாக்கவும். இப்போது தயாரித்து வைத்த பொடியில் பாதி அளவு சோப்பு பொடி சேர்த்து, அதை ஒரு டப்பாவில் நிரப்பி வைக்கவும். இப்போது கறைப்படிந்துள்ள இடத்தில் இந்த பொடி மற்றும் சேவிங் கிரீமை நேரடியாக தடவி அதன் மீது சில துளிகள் தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தால் கறை நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா : வெள்ளை ஆடையில் படிந்திருக்கும் டீ, காபி, மஞ்சள் கறையை எளிதாக நீக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு கறை படிந்த இடத்தில் பேக்கிங் சோடாவை அரை முதல் ஒரு டீஸ்பூன் போட்டு ஒரு பிரஷ் உதவியுடன் தேய்க்க வேண்டும். பிறகு ஆடையை எப்போதும் போல துவையுங்கள். கறை முற்றிலும் மறைந்துவிடும்.
ஆலா : வெள்ளை ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்ற ஆலா பயன்படுத்தலாம். இதற்கு 1 மூடி ஆலாவை 1 வாளி தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் துணியை அதில் ஊறவைத்து பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு துவைத்தால் கரை நீங்கிவிடும். ஆளாவை அதிகமாக பயன்படுத்தக் கூடாது மற்றும் நேரடியாகவும் ஆடையில் ஊற்றக்கூடாது. இல்லையெனில் துணி கிழிந்து விடும்.