கடாயில் விடாப்பிடியான கறை? ஒரே '1' எலுமிச்சை போதும்!! ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்!
கடாயில் விடாப்பிடியான கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று காணலாம்.

Utensil Cleaning Tips : சமையலறையில் பயன்படுத்தப்படும் கடாய் மற்றும் வாணலி பாத்திரங்களில் காலப்போக்கில் பிடிவாதமான கறை படிந்திருக்கும். அவற்றை ஆரம்பத்தில் இருந்தே சரியாக பராமரிக்காவிட்டால் சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இட்டைக்கு சூழ்நிலையில் உங்கள் வீட்டிலும் கடாயில் விடாப்பிடியான கறை இருந்தால் கை வலிக்காமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். அது என்னென்ன பொருட்கள் என்று இங்கு பார்க்கலாம்.
வெதுவெதுப்பான நீர் மற்றும் டிஷ் வாஷ்
கடாயில் இருக்கும் விடாப்பிடியான கறையை சுத்தம் செய்வதற்கு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள முறை எதுவென்றால் அது சூடான நீர் மற்றும் டிஷ் வாஷ் தான். இதற்கு முதலில் கடாயில் சூடான நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறு துளிகள் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலை ஸ்க்ரப் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு சாதாரண நீர் கொண்டு சுத்தம் செய்து பார்த்தால் பாத்திரம் புத்தம் புதியது போல் இருக்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை சுத்தம் செய்ய பல்வேறு வலிகளில் பயன்படுத்தலாம். இது எவ்வளவு பெரிய விடாப்பிடியான கறைகள் மற்றும் துர்நாற்றங்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது கடாயில் இருக்கும் இடம் அப்படியான கறையை போக்க பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை பத்திரத்தின் கரை மீது தடவி 30 நிமிடம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஸ்க்ரப் கொண்டு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சூடான நீர் கொண்டு அலசவும்.
இதையும் படிங்க: உஷார்! அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் இப்படி '1' ஆபத்து இருக்கு!!
எலுமிச்சை மற்றும் உப்பு
எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு இயற்கையான கிளீனர் அவை எப்பேர்ப்பட்ட கறைகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இப்போது கடாயில் படிந்திருக்கும் விடாப்படியான கறையை போக்க எலுமிச்சை மற்றும் உப்பு கொண்டு ஸ்கிரப் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதன் ஒரு பாதியில் உப்பை தெளித்து கடாயில் படிந்திருக்கும் கறை மீது நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் கடையில் படிந்திருக்கும் கறைகள் நீங்கிவிடும். பிறகு சூடன் நீர் கொண்டு அலச வேண்டும்.
இதையும் படிங்க: உணவு அடிபிடித்த பாத்திரங்களை நொடியில் பளபளக்க இப்படி செய்யுங்க...அசந்துடுவீங்க
வினிகர்
வினிகர் ஒரு சக்தி வாய்ந்த துப்புரவு பொருள். இது கடாயில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக நீக்க உதவுகிறது. இதற்கு கடையில் சம அளவு தண்ணீர் மற்றும் வினிகர் நிரப்பி சில மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இல்லையெனில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். வினிகரில் இருக்கும் அமல பண்புகள் கரையை எளிதாக அகற்றி விடும். ஸ்க்ரப் கொண்டு நன்றாக தேய்த்து, பிறகு சூடான நீர் கொண்டு கழுவ வேண்டும்.