பட்டுப்புடவையில் ஏற்படும் கறைகளை எளிமையாக நீக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

How To Remove Stains On Silk Sarees : பட்டுப்புடவைகள் பெண்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனென்றால் அவை விலை மட்டுமல்ல, அழகும் அதிகம். அதை பராமரிக்க சற்று மெனக்கெடுவதும் அவசியம். ஆனால் அதில் சிறு கறை பட்டாலும் பளிச் என தெரியும். சில கறைகள் போகவும் செய்யாது. புடவையில் கறையை பார்க்கும் போதெல்லாம் அந்த பட்டுப்புடவையை கட்ட முடியவில்லை என மனம் வருத்தத்தில் துடிக்கும். இந்த பதிவில் எளிய முறையில் எப்படி பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்கி, புதிது போல மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

இதையும் படிங்க: வெறும் 1 நிமிடத்தில் பட்டுப் புடவையை துவைக்கலாம் தெரியுமா? அதுவும் ரூ.5 செலவுல வீட்டிலேயே ட்ரை கிளீன்!! 

எண்ணெய் கறையா? 

பட்டுப்புடவையை அணிந்திருக்கும்போது பூஜை போன்ற விசேஷங்களில் எண்ணெய் துளிகள் படுவது சகஜம் தான். அதை நினைத்து கலங்க வேண்டாம். அப்படி எண்ணெய் கறைபட்டதும் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால் பேப்பர் டவல் வைத்து எண்ணெய் பட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம். மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்க கூடாது. நீங்கள் அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதும் அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி கறையை நீக்கலாம். இந்த மாதிரி செய்தால் எண்ணெய் உறிஞ்சப்பட்டு அந்த இடத்தில் கறைகள் நீங்கத் தொடங்கும். 

இந்த மாதிரி துணி அல்லது பேப்பர் டவலால் ஒற்றி எடுத்த பின்னர் அங்கு பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவி கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்து கூட வெந்நீரில் கறைகளை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது. 

இதையும் படிங்க: பட்டுப்புடவை எப்போதும் புதுசு மாதிரியே இருக்கணுமா? செலவில்லாத சூப்பர் டிப்ஸ் 

பட்டுப்புடவை கறை நீங்க!! 

சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்தன்மை கொண்டிருக்கும் லிக்விட் சோப்புகளை பயன்படுத்தலாம். லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்து கொள்ள வேண்டும். இதை விடாப்பிடியான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலும் பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தக்கட்டமாக இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். கறை நீங்கி புடவை பழைய நிலைக்கு வந்துவிடும். 

இந்த இரண்டு முறைகளிலும் பட்டுப்புடவைகள் மீது உள்ள கறைகளை எளிதாக நீக்க முடியும். ஆனால் பொறுமையாக செய்வது அவசியம்.