- Home
- Lifestyle
- Tile Cleaning Hacks : வெறும் '5' ரூபாயில் கிச்சன் டைல்ஸ் எண்ணெய் பிசுக்கை க்ளீன் பண்ண சூப்பர் டிப்ஸ்!!
Tile Cleaning Hacks : வெறும் '5' ரூபாயில் கிச்சன் டைல்ஸ் எண்ணெய் பிசுக்கை க்ளீன் பண்ண சூப்பர் டிப்ஸ்!!
கிச்சன் டைல்ஸில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை நொடியில் சுத்தம் பண்ண சூப்பர் டிப்ஸ் இங்கே.

Clean Greasy Kitchen Tiles
நம் வீட்டு கிச்சன் சுவர் மற்றும் டைல்ஸில் எண்ணெய் கறை படியும். அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அதில் தூசி, அழுக்குகள் மற்றும் சமைக்கும்போது உணவுகளின் துளிகள் பட்டு கடினமான கறையாக உருவாகும். பிறகு அது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறிவிடும். மேலும் துர்நாற்றமும் அடிக்க ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சில நொடிகளில் இந்த கறையை அகற்றி விடலாம். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா
கிச்சன் டைல்ஸில் படிந்திருக்கும் போக்க பேக்கிங் சோடா சிறந்த தேர்வு. இதற்கு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து தடிமனான பேஸ்ட் போல் தயாரித்து அதை கறைகள் மீது தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஸ்க்ரப்பர் பயன்படுத்தி தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் கறைகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிடும்.
வினிகர்
வினிகர் எண்ணெய் பிசுக்கை நீக்குவது மட்டுமின்றி கிருமிகளையும் கொன்றுவிடும் இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாதி அளவு வினிகர் மற்றும் பாதி அளவு சேர்த்து கொள்ளுங்கள். பிறகு கிச்சன் டைல்ஸ் மீது இதை தெளித்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு ஈரமான துணியால் துடைத்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும். டைல்ஸும் புதிதாக இருக்கும்.
எலுமிச்சை மற்றும் உப்பு
கிச்சன் டைல்ஸில் பிடிவாதமான எண்ணெய் கறை இருந்தால் அதை நீக்க ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் மீது உப்பு தூவி சுவரில் தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் அமிலம் எண்ணெய் பிசுக்கை நீக்கிவிடும். அதே நேரம் உப்பு சிறப்பு தன்மை கொண்டதால் அது அழுக்குகளை நீக்கும்.
சூடான நீர் மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட்
இதற்கு ஒரு வாளி சூடான நீரில் 2 ஸ்பூன் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்றாக கலந்து ஒரு துணியை அதில் நனைத்து எண்ணெய் பசை உள்ள சுவர்கள் மீதும் துடைத்தால் போதும் கறை முற்றிலும் அகற்றி விடும்.