- Home
- Lifestyle
- Kitchen Tips : வெறும் உப்பு போதும்! ஒரே நாளில் எறும்பு, கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம்
Kitchen Tips : வெறும் உப்பு போதும்! ஒரே நாளில் எறும்பு, கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம்
வெறும் உப்பை மட்டும் வச்சு வீட்டில் இருக்கும் எறும்பு கரப்பான் பூச்சி என எல்லா பூச்சி தொல்லைகளையும் விரட்டி அடிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Home Remedies For Ants and Cockroaches
உங்க வீட்டை எவ்வளவு சுத்தம் பண்ணினாலும் கரப்பான் பூச்சி, எறும்பு தொல்லை ஒழியலையா? ஸ்பிரே, பூச்சி மருந்து வச்சாலும் கூட திரும்பத் திரும்ப வந்துக் கொண்டே இருக்கா? கவலைப்படாதீங்க. ஒரு ஸ்பூன் உப்பு போதும். எல்லா பூச்சி தொல்லைகளையும் வீட்டிலிருந்து சுலபமாக விரட்டி அடிக்கலாம். என்ன உப்பா? என்று யோசிக்கிங்களா? ஆமாங்க, உப்பு சமையலுக்கு மட்டுமல்ல முழு வீடு மற்றும் சில பொருட்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
எறும்புகளை விரட்டியடிக்க :
வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். அவற்றை விரட்ட எறும்பு மருந்து, சாக்பீஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக உப்பு பயன்படுத்தலாம். இதற்கு எறும்பு பொந்தில் உப்பை தூவி விடுங்கள் இனி எறும்புகள் வீட்டுக்குள் வரவே வராது.
கிச்சன் சிங்க் :
என்னதான் கிச்சன் சிங்கை சுத்தமாக வைத்தாலும் கொஞ்சம் ஈரப்பதம் காரணமாக உணவு துகள்கள் சிக்கிக் கொண்டு ஒரு விதமான துர்நாற்றத்தை வீசும். இதனாலே சிங்கின் ஓட்டைக்குள் அதிகமாகவே கரப்பான் பூச்சிகள் வரும். எனவே கரப்பான் பூச்சிகள் தொல்லை மற்றும் கிச்சன் சிங்க் துர்நாற்றம் இரண்டையும் ஒரே சமயத்தில் தீர்க்க உப்பு பயன்படுத்தலாம். இதற்கு சிங்கில் தண்ணீர் செல்லும் பகுதியில் கல் உப்பை போடவும். மேலும் சிறிதளவு மஞ்சள் கலந்த தண்ணீரையும் சிங்கில் தெளித்து விடுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் சோப்பு போட்டு சுத்தம் செய்தால் மணம் வீசும். கரப்பான் பூச்சி தொல்லையும் இருக்காது.
வாட்டர் பாட்டிலில் துர்நாற்றம் நீங்க :
வாட்டர் பாட்டிலை என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் அதில் ஒரு விதமான நாத்தம் அடிக்கும். அதை நீக்க உப்பு பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கல் உப்பை வாட்டர் பாட்டிலில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் பாட்டிலில் துர்நாற்றம் அடிக்காது.
அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய ;
கை வலிக்க வலிக்க தேய்த்து கழுவினாலும் அடிபிடித்த பாத்திரத்தில் இருந்து கறை முழுமையாக நீக்க முடியலையா? கவலையவிடுங்க. ஒரு ஸ்பூன் கல்லுப்பு போதும். விடாப்பிடியான கறையை முழுமையாக நீக்கிவிடும். இதற்கு அடிப்படை பாத்திரத்தில் தண்ணீர் தெளித்து அதில் கல் உப்பை தூவி ஐந்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பிறகு பாத்திரம் கழுவும் லிக்விட் கொண்டு ஒரு ஸ்க்ரப்பர் உதவியுடன் பாத்திரத்தை தேய்த்து கழுவினால் போதும் கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.
கழிவறை துர்நாற்றத்தை போக்க :
விதவிதமான லிக்விடுகளை வாங்கி பயன்படுத்தினாலும் கழிவறையில் துர்நாற்றம் நீங்கவில்லையென்றால், உப்பு உங்களுக்கு உதவும் இதற்கு கழிவறை காமிட்டில் கல் உப்பை போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டுங்கள். பிறகு காலை எழுந்ததும் ஃபிளஷ் செய்து பாருங்கள். கறைகள், துர்நாற்றம் இருக்காது.