- Home
- Lifestyle
- Iron Box Cleaning Tips : ஒரே ஒரு பொருள்தான்; நிமிடத்தில் அயன்பாக்ஸ்ல ஒட்டியிருக்கும் அழுக்கு நீங்கி புதுசு போல மாறிடும்
Iron Box Cleaning Tips : ஒரே ஒரு பொருள்தான்; நிமிடத்தில் அயன்பாக்ஸ்ல ஒட்டியிருக்கும் அழுக்கு நீங்கி புதுசு போல மாறிடும்
அயன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் கறையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மிக எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Iron Box Cleaning Tips
நீண்ட காலமாக ஒரே அயன் பாக்ஸை பயன்படுத்தி வந்தால் அதன் அடிப்பகுதியில் கருப்பாக்கவோ அல்லது பழுப்பு நிறமாகவோ கறை படிந்திருக்கும். அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அந்த கறையானது இது துணிகளிலும் ஒட்டிக் கொள்ளும். ஆனால், நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அயன் பாக்ஸில் ஒட்டி இருக்கும் கறையை மிக எளிமையான முறையில் சுத்தம் செய்துவிடலாம். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா :
1 ஸ்பூன் நீரில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை அயன் பாக்ஸ் கறையின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.
வெள்ளை வினிகர் :
அரை கப் தண்ணீரில் அரை கப் வெள்ளை வினிகர் கலக்கவும். பிறகு ஒரு சுத்தமான துணியை அதில் 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த துணியை கொண்டு அயன் பாக்ஸ் கறையின் மீது தடவி சுத்தம் செய்ய வேண்டும்.
டூத் பேஸ்ட் :
டூத் பேஸ்ட் பற்களை மட்டுமல்ல அயன் பாக்ஸில் ஒட்டி இருக்கும் கறையை போக்கவும் உதவுகிறது. இதற்கு அயன் பாக்ஸ் கரை மீது டூத் பேஸ்ட்டை தடவி நன்கு காய்ந்த பிறகு ஒரு துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்தால் போதும். நல்ல மாற்றங்கள் காண்பீர்கள்.
உப்பு :
ஒரு காகிதம் அல்லது தேவையில்லாத துணியின் மீது சிறிதளவு பொடி உப்பை தூவிக்கொள்ளுங்கள். பிறகு ஐயன் பாக்ஸ் மிதமான சூட்டில் இருக்கும் போது அதன் மீது நன்கு தேய்த்தால் அதில் ஒட்டி இருக்கும் கறையானது நீங்கிவிடும்.
ஐஸ் கட்டிகள் :
அயன் பாக்ஸ் மிதமான சூட்டில் இருக்கும் போது அதன் மீது ஐஸ்கட்டிகளை பரப்பி வைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கறையானது ஐஸ் கட்டி கரையும் போது அதனுடன் சேர்ந்து கறைந்து விடும்.
நெயில் பாலிஷ் ரிமூவர் :
நகங்களில் இருக்கும் நெயில் பாலிஷை அளிப்பதற்கு நெயில் ரிமூவர் பயன்படுத்துவோம். அதுபோல அயன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் கறையை சுத்தம் செய்வதற்கும் இதை பயன்படுத்தலாம்.