வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்குவதற்கு சூப்பரான ட்ரிக் பற்றி இங்கு பார்க்கலாம்.
தற்போது பலரது வீடுகளில் வாஷிங் மெஷின் இருக்கிறது. வாரத்திற்கு 2-3 நாட்களாவது துணியை போடுவிடுவோம். வாஷிங் மெஷின் துணியை போட்டு எடுப்பதோடு சரி, அதை அப்படியே விட்டு விடுவோம். அதில் இருக்கும் ஈரப்பதத்தை துடைக்கவோ, சுத்தம் செய்யவோ மாட்டோம். இதனால் அதில் பயங்கரமாக துர்நாற்றம் வீசத் தொடங்கும். வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி என்று தெரியாமல் பல சர்வீஸ் சென்டரிலிருந்து ஆட்களை வரவழைத்து சரி செய்வார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கரைசல் ஒன்று தயாரித்து அதை வைத்து வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை சுலபமாக போக்கிவிடலாம். அது குறித்து விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?
தேவையான பொருட்கள் :
சூடான நீர் - 2 லிட்டர்
எலுமிச்சை தோல் - 4
பரிகாரம் - 1 துண்டு
கரைசல் தயாரிக்கும் முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் நுணுக்கிய படிகாரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் எலுமிச்சை தோலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு, 10-15 நிமிடங்கள் ஆற வைக்கவும். அவ்வளவுதான் இப்போது வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்குவதற்கான கரைசல் தயார்.
பயன்படுத்துவது எப்படி?
முதலில் வாஷிங் மெஷினில் துணிகள் ஏதும் இருக்கக் கூடாது. முழுமையாக காலியாக இருக்க வேண்டும். அடுத்ததாக தயாரித்து வைத்த கலவையை, வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்ட் ஊற்றும் இடத்தில் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் கலவையை வாஷிங்மெஷினுக்குள் ஊற்றவும் 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு 15 நிமிடங்கள் வாஷிங் மெஷினை ஓட விடவும். அடுத்து வாஷிங் மிஷினில் இருக்கும் தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விடுங்கள். பின் சுத்தமான தண்ணீரை ஊற்றி மீண்டும் ஒருமுறை வாஷிங் மெஷினை ஓட விடுங்கள். வாஷிங் மெஷின் இப்போது நன்றாக சுத்தமாகிவிடும். அடுத்ததாக ஒரு சுத்தமான துணியை கொண்டு வாஷிங்மெஷினில் ஒட்டி இருக்கும் ஈரத்தை துடைக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது வாஷிங் மெஷினில் துர்நாற்றம் நீங்கி நல்ல மணம் வீசும்.
இனி உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினில் நாற்றம் வீசுகிறது என்று கவலைப்பட வேண்டாம். இந்த டெக்னிக்கை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. வாஷிங் மெஷின் வாசனையாக இருக்கும்.
