- Home
- Lifestyle
- Fish Bone Stuck in Throat : மீன் முள் தொண்டையில் சிக்கினால் பதறாதீங்க! உடனே இதை செய்ங்க
Fish Bone Stuck in Throat : மீன் முள் தொண்டையில் சிக்கினால் பதறாதீங்க! உடனே இதை செய்ங்க
தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை இயற்கை வழியில் வெளியேற்ற சில உதவி குறிப்புகள் இங்கே.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொண்டால்
மீன் குழம்பு என்றாலே அசைவ பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதில் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால் அதன் முள் தான். பல நேரங்களில் மீன் முள் நம்முடைய தொண்டையில் சிக்கி இன்னலை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு மீனை கொடுக்கும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தொண்டையில் மீன் முள் சிக்கி இருந்தால் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், மருத்துவமனைக்கு செல்லாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை இயற்கை வழியில் எடுப்பது எப்படி என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.
வாழைப்பழம் :
தொண்டையில் சிக்கி இருக்கும் முள்ளை வெளியேற்ற வாழைப்பழம் சிறந்த தேர்வு. இதற்கு ஒரு பெரிய துண்டு அளவு வாழைப்பழத்தை கடித்து சிறிது நிமிடம் தொண்டையில் வைக்கவும். இப்படி வாழைப்பழத்தை வைப்பதன் மூலம் அது வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் தொண்டையில் மாட்டிக்கொண்ட மீன் முள்ளை சேர்த்து வயிற்றுக்குள் தள்ளப்படும். பிறகு வயிற்றில் அது எளிதாக செரிமானமாகிவிடும்.
உப்பு மற்றும் தண்ணீர் :
தொண்டையில் மீன் முள் சிக்கி இருந்தால் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை குடியுங்கள். முள் வயிற்றுக்குள் இறங்கிவிடும்.
சாதம் :
தொண்டையில் சிக்கி இருக்கும் மீன் முள்ளை வெளியேற்ற இது சிறந்த வழி. இதற்கு சாதத்தை உருட்டி முழுங்க வேண்டும். சாதம் தொண்டையில் படும்போது தொண்டையில் சிக்கியிருக்கும் முள்ளையும் சேர்த்து வயிற்றுக்குள் தள்ளும்.
ஆலிவ் ஆயில் :
இயற்கையாகவே ஆலிவ் ஆயில் பிசுபிசுப்பு தன்மை கொண்டது என்பதால் தொண்டையில் சிக்கி இருக்கும் முள்ளை எடுக்க இது உதவி செய்யும். இதற்கு 2-3 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்க வேண்டும். இதன் வழுவழுப்பான தன்மைகள் தொண்டையில் மாட்டிக் கொண்ட முள்ளும் வழுக்கி வயிற்றுக்குள் சென்று விடும்.
பிரட் மற்றும் தண்ணீர் :
ஒரு பிரட் துண்டை கடித்து கொஞ்சமாக தண்ணீர் குடித்து வேகமாக முழுங்க வேண்டும். பிரட் தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளை சுலபமாக வயிற்றுக்குள் தள்ளிவிடும்.
தொண்டையில் மீன் முள் மாட்டிக்கொண்டால் செய்யக்கூடாதவை :
- உங்களது விரல்களால் ஒருபோதும் மீன் முள்ளை அகற்ற முயற்சிக்காதீர்கள். சில சமயங்களில் காயத்தை ஏற்படுத்தி இரத்தப்போக்கு அல்லது தொற்றுக்கு வழிவகுக்கும்.
- மீன் முள்ளை அகற்ற குச்சி, டூத் பிரஸ் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
- தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டால் பயப்படவோ கட்டவோ சத்தம் போடவோ கூடாது. இல்லையெனில் தசைகள் தளர்ந்து பிரச்சினையாகி விடும்.
- தொண்டையைப் பிடித்து அழுத்துவது அல்லது அழுத்தி பிடிப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் இதனால் முள் எடுப்பது சிரமமாக இருக்கும்.
- அதிகமாக இரும்ப வேண்டாம். ஏனெனில் அதிகமாக இரும்பும் போது முள் உணவு குழாய்க்குள் தள்ளப்பட்டு பிறகு எடுக்க முடியாமல் போகும்.