- Home
- Lifestyle
- Bakrid Special mutton recipe: பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல்...நாவில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் வடை செய்வது எப்படி?
Bakrid Special mutton recipe: பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல்...நாவில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் வடை செய்வது எப்படி?
Bakrid Special mutton vadai: பக்ரீத் பண்டிகையில் பிரியாணி மட்டுமின்றி, இன்னும் சில உணவு பொருட்களும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படியாக, இந்த பதிவில் சுவையான மட்டன் வடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Bakrid Special mutton recipe:
தமிழகத்தில் இஸ்லாமியர்களால், பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ஆம் தேதி அதாவது நாளை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. பக்ரீத் பண்டிகை என்றவுடன் நம் அனைவருக்கும் கண் முன் வருவது பிரியாணி தான். பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். பின்னர் பிரியாணி செய்து, நண்பர்கள் உற்றார் உறவிகர்களுக்கு கொடுப்பார்கள். அந்த நாளில் நமக்கு ஏதாவது இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்களா..? என்று தேடுவோம். ஆனால், பிரியாணி சுவை வாரத்தில் இரண்டு முறை சுவைக்கும், சிறப்பான உணவு பொருளாக மாறியுள்ளது. இந்த நாளில் பிரியாணி மட்டுமின்றி, இன்னும் சில உணவு பொருட்களும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படியாக, இந்த பதிவில் சுவையான மட்டன் வடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Bakrid Special mutton recipe:
மட்டன் வடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி -1 கப்
பெருங்காயம் -1/4 ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் -1/2 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் -1 ஸ்பூன்
மட்டன் கீமா -200 கிராம்
கடலை மாவு -2 ஸ்பூன்
கடலை பருப்பு -1/2 கப்
Bakrid Special mutton recipe:
பெருஞ்சீரகம் -2 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
வெங்காயம் - பொடிசாக நறுக்கியது 1
கரம் மசாலா -1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்புன்
கறிவேப்பிலை இலை, உப்பு -தேவையான அளவு
Bakrid Special mutton recipe:
செய்முறை விளக்கம்:
1. முதலில் பெருஞ்சீரகம், கடலை பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் போன்றவற்றை ஈரமில்லாத ஒரு பெரிய கிண்ணம் எடுத்து அதில் ஒன்றாக சேர்த்து கொள்ளளவும். இதையடுத்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு 45 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி மிக்சியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. மட்டனை வெட்டி எடுத்து கொண்டு, நன்றாக மிக்சியில் அல்லது கிரைண்டரில் அரைத்து கொள்ளவும். பிறகு, அதனுடன் கடலை மாவு, பெருங்காயம், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
Bakrid Special mutton recipe:
3. கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைஈரமில்லாத வேறு ஒரு கிண்ணத்தில் சேர்த்து பிசையவும்.
4. பின்னர் 2 மற்றும் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும்ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தற்போது, வடை தட்டுவது போல் உருண்டையாக மாவு எடுத்து தட்டையாக அழுத்தி எடுக்கவும்.
5. வடை போடுவது போல் வாணலியில் எண்ணெய் ஊற்றி கோல்டன் நிறத்தில் வரும் வரை இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். பிறகு, ஈரமில்லாத பாத்திரத்தில் டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தி இதில் இருக்கும் அதிக எண்ணெய்யை எடுத்து விடவும். இப்படி சுவையான மட்டன் வடை ரெடி..! நீங்களுக்கு ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்...