கொத்தமல்லியை நீண்ட நாள் ஃபிரஷாக வைக்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!!
உங்கள் வீட்டில் வாங்கும் கொத்தமல்லி இலைகளை நீண்ட நாள்கள் ஃபிரஷாக வைக்க உதவும் சில குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே எல்லா வகையான உணவிலும் கொத்தமல்லி இலை சேர்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, குழம்பு போன்ற உணவுகளில் கடைசியாக கொத்தமல்லி இலையை தூவும் போது கிடைக்கும் மணமும், ருசியும் வேறலெவல். இந்நிலையில், கொத்தமல்லி இலைகள் வாங்கி சீக்கிரத்தில் பழுத்து விடுகிறது. சொல்லப்போனால் 2 நாட்களுக்கு மேல் கொத்தமல்லி இலை ஃபிரஷாக இருப்பதில்லை. எனவே கொத்தமல்லி இலைகளை நீண்ட நாள் ஃபிரஷாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை குறித்து இங்கு பார்க்கலாம்..
பிளாஸ்டிக் பையில் வையுங்கள்: நீங்கள் கொத்தமல்லியை வாங்கியதும் முதலில் அவற்றை நன்கு அலசி கொள்ளுங்கள். பின் நன்கு உலர்ந்த பின் அவற்றை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து மடித்து பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 2 வாரங்களுக்கு அது அப்படியே ஃபிரஷாக இருக்கும்.
தண்ணீரில் வைக்கலாம்: கொத்தமல்லி இலையே தண்ணீரில் வைக்க முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பின் கொத்தமல்லியின் இலையின் வேர் பகுதி தண்ணீரில் படும்படி அவற்றை வையுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் கொத்தமல்லி இலை ஒரு வாரம் பிரஷ்ஷாக இருக்கும்.
இதையும் படிங்க: Diabetes: சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் கொத்தமல்லி சாறு...தினமும் 1 டம்ளர் போதும் ...எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
ஃப்ரிட்ஜில் இப்படி வையுங்கள்: கொத்தமல்லி இலையை ஃப்ரிட்ஜில் வைக்கும் முன் அவற்றை முதலில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அவை உலர்ந்த பின் ஒரு சின்ன துணி அல்லது கைக்குட்டையில் வைக்கவும். பின் அவற்றை ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைக்க வேண்டும். மறுநாள் காலை கொத்தமல்லியை அவற்றில் இருந்து எடுத்து காற்று புகாத படி ஒரு பாக்ஸில் போடு ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
காற்று புகாத டப்பாவில் வையுங்கள்: இதற்கு முதலில் நீங்கள் கொத்தமல்லியை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும் அவை உலர்ந்ததும் டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். பின் அவற்றை ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்து மூடும் முன் கொத்தமல்லி மேல் டிஷ்யூ பேப்பர் மேல் பரப்பவும். இவ்வாறு செய்தால் கொத்தமல்லி நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
இதையும் படிங்க: எப்போதும் இஞ்சி டீ தானா! என்று கேட்பவர்களுக்கு இப்படி ஒரு தடவ கொத்தமல்லி டீ செய்து கொடுங்க!
பிளாஸ்டிக் பையில் வைக்கும் முன் நீங்கள் கொத்தமல்லி இலையை பாலித்தீன் அல்லது பிளாஸ்டிக் பையில் வைக்கும் முன் அவற்றின் வேர் பகுதியை வெட்டி பின் வைக்கவும் இவ்வாறு செய்தால் கொத்தமல்லி இலை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக இருக்கும்.