வீடு முழுவதும் உள்ள கொசுக்களை விரட்ட ரசாயனம் இல்லாத லிக்விட் இருக்கு...இப்படி ஒருமுறை தயார் செஞ்சா போதும்..!
Kosuvai olippathu eppadi: கொசுவை விரட்டி அடிக்க நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சில பொருட்களை வைத்து லிக்விட் தயார் செய்து பயன்படுத்தலாம் அது எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
மழைக்காலம் துவங்கிவிட்டாலே கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. இந்த கொசு கடித்தால் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற வியாதிகள் வரும். கொசுக்களை விரட்டி அடிக்கவும் கட்டுக்குள் வைக்கவும் கொசுவர்த்தி, கொசு திரவம், கொசுவை பிடிக்கும் மிஷின், என்று எத்தனையோ பொருள்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இத்தனை சாதனங்கள் இருந்தும் கொசு நம்மிடம் டிமிக்கி கொடுத்து விடுகிறது.
இந்த கொசுக்களை அழிப்பதென்பது சற்று கடினமான காரியம் தான். முடிந்த அளவிற்கு நம்மையும் நம்மைச் சுற்றியும் சுத்தமாக வைத்திருந்து, ஆங்காங்கே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதும் தான் நமக்கு பாதுகாப்பு ஆகும்.
ஆனால், இதனை பயன்படுத்தும் போது நமக்கும் ஆரோக்கிய கேடு உண்டாகிறது. எனவே, நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாமல் கொசுவை விரட்டி அடிக்க நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சில பொருட்களை வைத்து லிக்விட் தயார் செய்து பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்பூரம் - 1 டீஸ்புன்
லவங்கம்- 1 டீஸ்புன்
பூண்டு நறுக்கியது -1 டீஸ்புன்
வெங்காயம் நறுக்கியது - 1 டீஸ்புன்
ஷாம்பு -1 டீஸ்புன்
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்புன்
டூத் பேஸ்ட்- 1 டீஸ்புன்
mosquitoes
செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காயத்தையும், பூண்டையும் தோலுரிச்சி நல்லா பொடியா நறுக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
அதில், பொடி கற்பூரம் ஒரு பத்து போட்டு, அது கூடவே லவங்கம் ஒரு ஐந்து சேர்த்துகோங்க. இதோட ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் கட் பண்ணி அதுல ஊத்திவிடுங்கள்.
இதை எல்லாம் சேர்த்த பிறகு நல்ல நுரை வரும் அளவுக்கு மிக்ஸ் பண்ணி விட்டுடுங்க. மிக்ஸ் பண்ண பிறகு அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் முதலில் பேஸ்ட் போல செய்து வைச்சிடுங்க.
பிறகு கடைசியா கொஞ்சமா ஏதேனும் ஒரு டூத் பேஸ்ட் சேர்த்து கூடவே கொஞ்சமா தண்ணி ஊற்றி நல்லா மிக்ஸ் பண்ணி வெச்சிடுங்க.
இது குறைஞ்சது எட்டு மணி நேரம் கழித்து, ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துவிட்டு சாயங்கால நேரம் உங்கள் வீட்டின் அனைத்து மூலையிலும் அடிச்சி விட்டுடுங்க. இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் கொசு உங்க வீட்டு பக்கம் வரவே வராது.