Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?
Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய கால மாற்றத்தில் பல வகையான எண்ணெய் வகைகள் சந்தைகளில் பயன்பாட்டில் கிடைத்தாலும். பாரம்பரிய எண்ணெய்களுக்கு இன்றளவும் அதன் தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன. அதில், இருக்கும் நன்மைகள் வேறெந்த கெமிக்கல் கிரீம்களுக்கும் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில், விளக்கெண்ணெய்யும் முக்கிய இடம் பெறுகிறது. தாவர எண்ணெய் வகையை சார்ந்த, இந்த ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ரிச்சினஸ் கொம்யூனிஸ் எனப்படும் ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதிலும் விளக்கெண்ணெய் குறைந்த அளவே உற்பத்தி ஆகிறது. இதை பொதுவாக சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. ஆம், இது அழகு மற்றும் உடல்நல தேவைகளுக்கு அதிக பயனை தருகிறது. அதனால், சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது.
முடி உதிர்வு மற்றும் பெரும்பான்மையான தோல் பிரச்சினைகளிலிருந்து நிம்மதியைத் தருகிறது அந்த வகையில் எப்படியெல்லாம் விளக்கெண்ணெய் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
முகப்பரு முதல் உடல்சூடு வரை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெயில் பல மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளன. சருமத்துடன் சேர்ந்து இது அலர்ஜி மற்றும் நுண்ணுயிரி எதிர்ப்பியாக செயல்படுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறவும் ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது. இதை குடிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. தலையின் மேற்பரப்பில் ஏற்படும் தொற்று நோய்களை சரி செய்வதிலும் ஆமணக்கு உதவுகிறது.
தூங்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட சருமப் பகுதிகளில் அதை தடவவும்.
விளக்கெண்ணெய் முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது ..?
1. விளக்கெண்ணெயில் சுத்தமான பருத்தி துணியை நனைத்து சருமத்தின் முகம், கழுத்து பகுதியில் நேரடியாக துடைத்து விடவும். பிறகு வட்ட இயக்கங்களில் 3-5 நிமிடங்கள் எண்ணெயை மசாஜ் செய்யவும்.
2. பிறகு இலேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும். விளக்கெண்ணெய் அடர்த்தியை விரும்பாதவர்கள் மற்ற தாவர எண்ணெய்களுடன் இதை கலந்து பயன்படுத்தலாம்.
விளக்கெண்ணெய் பயன்கள்:
1. விளக்கெண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி இது சரும பராமரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
2. விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவுகின்றது. மேலும், இது சரும எரிச்சலை போக்க உதவும்.
3. விளக்கெண்ணெய் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
4. விளக்கெண்ணெய் உள்ள ரிகினோலிக் அமிலத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் வீக்கத்தை தடுக்க உதவும்.
5. முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பையும் சரி செய்ய கூடும். அதுமட்டுமின்றி, முகத்தில் சுருக்கங்கள் இருந்து தேய்த்தால், முகம் பொலிவு பெறும்.
6. கண்களின் வீக்கம் அல்லது சோர்வாக இருந்தால் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். தலையில் பொடுகு மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாக்க, விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது.
7. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்ப்பதால் கருமையான புள்ளிகளை அகலும்.
8. முகம் மட்டுமின்றி, முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விளக்கெண்ணெயை உச்சந்தலையில் மற்றும் முடிகளில் தடவவும்.