MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fly Repellent: வீட்டில் ஈ தொல்லையா? கிச்சனில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!

Fly Repellent: வீட்டில் ஈ தொல்லையா? கிச்சனில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!

Fly Repellent: வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகிறதா? இதைச் சமாளிக்க, உங்கள் கிச்சனில் இருக்கும் இஞ்சியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 15 2026, 06:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வீட்டில் ஈ தொல்லையை சமாளிக்க எளிய டிப்ஸ்
Image Credit : Freepik

வீட்டில் ஈ தொல்லையை சமாளிக்க எளிய டிப்ஸ்

வீடுகளில் ஈக்கள் தொல்லை இல்லத்தரசிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. டீ, காப்பி டம்ளர்கள் மற்றும் உணவுகளில் ஈக்கள் விழுந்து அவற்றை நாசம் செய்து விடுகின்றன. பாடாய்படுத்தும் ஈக்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என முயன்று வருகின்றனர். ஈக்களை விரட்ட கடைகளில் விற்கும் விலை உயர்ந்த ஸ்ப்ரேக்களை வாங்க வேண்டாம். உங்கள் கிச்சனில் இருக்கும் இஞ்சி போன்ற எளிய பொருட்களை வைத்தே இந்த பிரச்சனையைச் சரிசெய்யலாம்.

இதையும் படிங்க:Cooker Cleaning: அடிபிடித்த குக்கர் புதுசு போல ஜொலிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்.. மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஈக்களை விரட்டியடிக்க இதை செய்யுங்கள்
Image Credit : Freepik

ஈக்களை விரட்டியடிக்க இதை செய்யுங்கள்

இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிது மிளகுத்தூள் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். ஈக்கள் அதிகம் வரும் ஜன்னல், கதவு, குப்பைத் தொட்டி அருகே இதைத் தெளிக்கவும். உணவுப் பொருட்கள் மீது நேரடியாகத் தெளிக்க வேண்டாம்.

ஈக்களை விரட்டியடிக்கும் இஞ்சி

ஈக்களுக்கு இஞ்சியின் வாசனை பிடிக்காது. ஒரு கப் தண்ணீரில் ஒரு பெரிய ஸ்பூன் சுக்குப் பொடியைக் கலந்து, ஈக்கள் அமரும் இடங்களில் லேசாகத் தெளிக்கவும். சில பரப்புகளில் கறை ஏற்பட வாய்ப்புள்ளதால், முதலில் சிறிய இடத்தில் சோதித்துப் பார்க்கவும்.

இதையும் படிங்க: Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

Related Articles

Related image1
fruit flies: ஈக்கள் தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை மட்டும் செய்து பாருங்க
Related image2
House Fly Control Tips : வெறும் 2 கற்பூரம்! ஈக்கள் தொல்லையே இனி இருக்காது
35
உணவுப்பொருட்களை மூடி வையுங்கள்
Image Credit : Freepik

உணவுப்பொருட்களை மூடி வையுங்கள்

பழத்தோல்கள், சிந்திய ஜூஸ் போன்றவை ஈக்களை ஈர்க்கும். எனவே, உணவை எப்போதும் மூடி வைக்கவும், குப்பைத் தொட்டியை தினமும் காலி செய்யவும். பால்கனி, ஜன்னல்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால், கொசுத் தொல்லையையும் தவிர்க்கலாம். ஜன்னல்களில் வலை அமைப்பது ஒரு நல்ல வழி.

45
வினிகர் & சோப் வைத்தும் ஈயை விரட்டலாம்
Image Credit : Freepik

வினிகர் & சோப் வைத்தும் ஈயை விரட்டலாம்

ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தைக் கலந்து ஈக்கள் அதிகம் உலவும் இடத்தில் வைக்கவும். வினிகரின் புளிப்பு வாசனைக்கு ஈக்கள் ஈர்க்கப்பட்டு அதில் வந்து அமரும். அப்போது, சோப் நீரின் அடர்த்தியால் ஈக்களால் மேலே பறக்க முடியாமல் கிண்ணத்திலேயே விழுந்துவிடும்.

புதினா & எலுமிச்சை

ஈக்களுக்கு எலுமிச்சை மற்றும் புதினா இலையின் நறுமணம் அறவே பிடிக்காது. அரை எலுமிச்சைப் பழத்தில் சில கிராம்புகளைக் குத்தி ஜன்னல் ஓரங்களில் வைத்தால், ஈக்கள் வீட்டிற்குள் வருவதைத் தவிர்க்கலாம்.

வீட்டு வைத்தியங்களை மட்டும் நம்பியிராமல், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதே ஈக்களை நிரந்தரமாக விரட்ட சிறந்த வழியாகும்.

55
இயற்கை தாவரங்களும் ஈயை அண்ட விடாது
Image Credit : Freepik

இயற்கை தாவரங்களும் ஈயை அண்ட விடாது

ஈக்களை விரட்ட ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை தாவரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பதும் ஒரு சிறந்த வழிமுறையாகும். உங்கள் ஜன்னல் மற்றும் பால்கனி பகுதிகளில் துளசி, கற்பூரவள்ளி அல்லது லாவெண்டர் போன்ற மூலிகைத் தாவரங்களை தொட்டிகளில் வளர்த்து வந்தால், அவற்றிலிருந்து வெளிப்படும் இயற்கை வாசனை ஈக்களை வீட்டிற்குள் அண்ட விடாமல் தடுக்கும்.

மேலும், யூக்கலிப்டஸ் அல்லது டீ ட்ரீ எஸென்ஷியல் ஆயில்களை சில துளிகள் தண்ணீரில் கலந்து, காட்டன் பஞ்சில் நனைத்து ஈக்கள் அதிகம் வரும் இடங்களில் வைத்துவிட்டால், வீடு முழுவதும் நறுமணமும் வீசும்; ஈக்களின் தொல்லையும் முற்றிலும் நீங்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சில நாட்களில் பளபளக்கும் முகம் வேண்டுமா? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க
Recommended image2
ghee rice : பாய் வீட்டு நெய் சோறு...இந்த சுவையில் சாப்பிடிருக்கீங்களா?
Recommended image3
Necklace Designs: கல்யாண கலை தரும் அட்டகாசமான நெக்லஸ் டிசைன்கள்!
Related Stories
Recommended image1
fruit flies: ஈக்கள் தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை மட்டும் செய்து பாருங்க
Recommended image2
House Fly Control Tips : வெறும் 2 கற்பூரம்! ஈக்கள் தொல்லையே இனி இருக்காது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved