MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாத வெடிப்பா? இந்த 2 பொருள் போதும் பாதம் பளபளப்பாகும்!!

பாத வெடிப்பா? இந்த 2 பொருள் போதும் பாதம் பளபளப்பாகும்!!

Dry Heels : மழை காலம் வந்துவிட்டது, குளிர்காலம் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பாதங்களையே வெடிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Ansgar R
| Updated : Oct 25 2024, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dry Heels

Dry Heels

வெயில் காலத்திலும் சரி, குளிர்காலத்திலும் சரி பலருக்கு வறண்ட சருமம் அதிக அளவில் ஏற்படும். அதிலும் குறிப்பாக பாதத்தில் வெடிப்புகள் அதிக அளவில் ஏற்படும். உண்மையில் இதற்கென்று தனியே மருத்துவரிடம் சென்று தேர்வு காண நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. ஆனால் இப்படிப்பட்ட பாத வெடிப்புகளை நம்ம வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரிசெய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கட்டாயம் அது எப்படி என்பதை நாமும் அறிந்துகொள்ளவேண்டும். சரி வாருங்கள் எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமக்கு இருக்கும் அந்த பித்த வெடிப்புகளை சரிசெய்வது என்பதை காணலாம். 

பண்டிகை காலத்தில் உங்க இதயத்தை எப்படி ஆரோக்கியமாக வைப்பது ? நிபுணர் சொன்ன சீக்ரெட்!

24
Dry heels remedy

Dry heels remedy

முதலில் உங்கள் காலில் உள்ள இறந்த செல்களை அகற்ற அதை நன்கு கழுவ வேண்டும். பிறகு தேன் கலந்த தண்ணீரில் உங்கள் கால்களை கொஞ்சம் நேரம் நன்றாக மூழ்கிய நிலையில் ஊறவைத்துவிட்டு. பிறகு குதிகால்களை நன்றாக தேய்த்து வர இரண்டே வாரத்தில் முற்றிலும் அந்த பாத வெடிப்பு நீங்கிவிடும். அதேபோல இரவு நேரத்தில் தேனை கொஞ்சம் உங்கள் பாதத்தில் தடவி கொஞ்சம் நேரம் அதை ஊறவைத்துவிட்டு பிறகு நன்றாக கழுவிவிட்டு உறங்கினால் இரு வாரங்களில் நல்ல மாற்றங்க உங்கள் குதிகால்களில் தென்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

34
Dry Heels Home Remedy

Dry Heels Home Remedy

தேன் உடலுக்கு மிகவும் நல்லது, ஆனால் அந்த தேனுடன் நீங்கள் கொஞ்சம் அரிசி மாவை கலந்து கூட இந்த பாத வெடிப்புக்கு நீங்கள் தீர்வு காணமுடியும். அதாவது 3 பங்கு அரிசி மாவிற்கு ஒரு பங்கு தேன் மற்றும் உங்கள் வீட்டில் வினிகர் இருந்தால் அதையும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் வெடிப்பு உள்ள பாதங்களில் நன்றாக தேய்க்கவும். இந்த கலவை ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் உங்கள் கால்களில் ஊற வேண்டும். அப்படி ஊறிய கால்களை நன்றாக கழுவுங்கள். இந்த விஷயத்தை வாரம் 3 முறை செய்தால், நிச்சயம் இரண்டே வாரத்தில் உங்கள் பாத வெடிப்பு நீங்கி நல்ல பளபளவென பாதங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

44
Heels

Heels

எலுமிச்சை மசாஜ்.. ஆம் அனைவரது வீட்டிலும் எலுமிச்சை கண்டிப்பாக இருக்கும். உங்கள் பாதம் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஒரு அகல பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள். அதில் இரண்டு அல்லது 3 எலுமிச்சை பழங்களை நன்றாக பிழிந்து அதில் உங்கள் கால்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பது நமக்கு தெரியும். அந்த சிட்ரிக் அமிலங்கள் இறந்த செல்களை அகற்ற பெரிய அளவில் பயன்படும். நிச்சயம் உங்கள்கள் கால்கள் இறந்த செல்கள் நீங்கி பளபளவென காட்சியளிக்கும்.

கொலஸ்ட்ரால் குறையணுமா? அப்படின்னா இந்த 5 வகை மீன்களை சாப்பிடுங்க!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AR
Ansgar R
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved