கொலஸ்ட்ரால் குறையணுமா? அப்படின்னா இந்த 5 வகை மீன்களை சாப்பிடுங்க!!
Fish for Lower Cholesterol : உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சில வகை மீன்களை மட்டும் சாப்பிட்டால் போதும். அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
Fish for Lower Cholesterol In Tamil
கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு கொழுப்பு பொருளாகும். கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் (குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம்) மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் (அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம்).
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் பெரும்பாலானோர் மக்கள் அதிகப்படியான கொழுப்பு பிரச்சனையால் ரொம்பவே பாதிக்கப்படுகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடை செய்யப்பட்டு மாரடைப்பு வரும். இது தவிர ரத்த அழுத்தம் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Fish for Lower Cholesterol In Tamil
ஆனால் உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இயற்கையான வழியில் உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை சுலபமாக குறைக்க முடியும். அந்த வகையில் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சில மீன் வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றை நீங்கள் உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அவை என்னென்ன மீன்கள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சிக்கன், மீன் நல்லது தான். ஆனா உண்மையில் எது ஆரோக்கியத்தை அள்ளி தரும் தெரியுமா?
Fish for Lower Cholesterol In Tamil
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மீன்கள்:
1. சூரை மீன்
இந்த மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த அமிலங்கள் இதய தமனியில் சேரும் எல்.டி.எல் கொழுப்பின் அளவை குறைக்க பெரிது உதவும்.
2. ட்ரவுட் மீன்
இந்த மீனிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை நம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை பராமரிக்கவும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: வீட்டு சமையலறையில் மீன் வாசனை கொமட்டுதா? ஒரு நொடியில் தீர்வு!!
Fish for Lower Cholesterol In Tamil
3. ஹெர்ரிங் மீன்
இந்த வகை மீனானது EPA மற்றும் DHA என்ற இரண்டு வகை என அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. மேலும் இவை உடலில் வீக்கத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது இது தவிர இந்த மீன் சாப்பிட்டால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
4. கானாங்கொளுத்தி மீன்
இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மீனில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன இந்த மீன் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிது உதவும்.
5. மத்தி மீன்கள்
இந்த மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இந்த அமிலம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது மேலும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செல்லினம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால், அவை உடலில் ரத்த அளவை குறைக்க உதவுகிறது.