MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சிக்கன், மீன் நல்லது தான். ஆனா உண்மையில்  எது ஆரோக்கியத்தை அள்ளி தரும் தெரியுமா?

சிக்கன், மீன் நல்லது தான். ஆனா உண்மையில்  எது ஆரோக்கியத்தை அள்ளி தரும் தெரியுமா?

Chicken vs Fish : சிக்கன் அல்லது மீன் இவை இரண்டில் எது சாப்பிட்டால் உண்மையில் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 22 2024, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chicken vs Fish In Tamil

Chicken vs Fish In Tamil

சைவ உணவை சாப்பிடுபவர்களை விட அசைவ உணவுகளின் மீது தான் பலருக்கும் விருப்பம். அதுவும் குறிப்பாக சண்டே வந்தாலே கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் அசைவம் தான் இருக்கும். சில பேர் சைவ உணவு என்றாலே செய்யும் வேலையை கூட மறந்து விடுவார்கள்.

அசைவ உணவுகளில் மீன், முட்டை, சிக்கன், மட்டன், காடை, நண்டு, இறால் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்தவகையில், சிக்கன் அல்லது மீன் இந்த இரண்டில் எது உண்மையில் ரொம்பவே ஆரோக்கியமானது? அதற்கான பதிலை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Chicken vs Fish In Tamil

Chicken vs Fish In Tamil

சிக்கன் நன்மைகள்:

சிக்கன் புரதங்களின் சிறந்த மூலமாகும். இது உடல் வளர்ச்சிக்கும், செயல் திறனுக்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால் சிக்கனை அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக பிதாய்லர் கோழி வகைகளை முடிந்த வரை தவிர்க்கவும். அதற்கு பதிலாக நீங்கள் நாடுக்கோழி சாப்பிடுங்கள். அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. 

முக்கியமாக எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆட்டிறச்சி, மாட்டிறச்சியைக் காட்டிலும் சிக்கன் தான் பெஸ்ட். இதுதவிர, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்க்கான குறைந்த அபாயத்தைக் கொண்டுள்ளது.

அதுபோல கோழியின் மார்பகம் வைட்டமின் பி3-ன் நல்ல மூலமாகும். கோழியின் தொடை மற்றும் முட்டிப் பகுதியில் துத்தநாகம், செசிலினியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

34
Chicken vs Fish In Tamil

Chicken vs Fish In Tamil

மீன் நன்மைகள்:

பொதுவாக கடல் உணவுகள் அதிக சத்து மிகுந்தவை.  இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. தசைகளை வலுவாக்கும் புரதச்சத்து, கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ ஆகியவையும் நிறைந்து காணப்படுகிறது. இந்த உணவுகளை வாரத்தில் இரண்டு தடவை சாப்பிட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

கடல் மீனை உண்பதால் மூளையின் செயல்பாடு மேம்பாடு அடையும். கண் பார்வை கூர்மையாக இருக்க மீன் சாப்பிடுவது அவசியமாக கருதப்படுகிறது. புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை கடல் உணவுகள் குறைக்கின்றன. கடல் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது எலும்புகளின் தேய்மானம் குறைக்கப்படுகிறது. நல்ல உறக்கம் கிடைப்பதும் கடல் உணவுகளின் மற்றுமொரு சிறப்பு. 

44
Chicken vs Fish In Tamil

Chicken vs Fish In Tamil

மீன்- சிக்கன்.. எது சிறந்தது? 

சிக்கன், மீன் ஆகிய இரண்டு உணவுகளும் வெவ்வேறு வகையான சத்துக்களை கொண்டுள்ளன. இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தான் கொடுக்கின்றன. இதில் எது சிறந்தது என்று சொல்வது சற்று கடினம். கோழி இறைச்சியில் இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம் ஆகியவை உள்ளன.

மீனில் கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா -3 போன்றவை அதிகமுள்ளன. சிக்கன், மீன் ஆகிய இரண்டுமே புரதச்சத்துகளை உடையது. உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் அதிகம் வேண்டுமோ அந்த உணவினை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள். மற்றொன்றை அவ்வப்போது உண்ணுங்கள். மீன், சிக்கன் இரண்டுமே சத்தானது தான். தேவைகளை பொறுத்து அதனை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
4th T20 • NZ vs IND 2026
Innings Break
NZNZ
(20.0 ov)259/7
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(56.4 ov) 329 & 158/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nethili Karuvattu Kulambu: கிரங்கடிக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு.! ருசியை கூட்டும் அந்த 3 காய்கள்.!
Recommended image2
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved