தேயிலை கெட்டுப்போகுமா? எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா?
Tea Expiration Date : தேயிலை காலாவதியாகி கெட்டுபோவதை எப்படி கண்டறிய வேண்டும் என இங்கு காணலாம்.

தேயிலை கூட கெட்டுப்போகுமா? எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா?
நல்ல தேநீர் உங்களை சுறுசுறுப்பாக மாற்றும். வேலைகளுக்கு நடுவில் தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாக உணரச் செய்யும். இஞ்சி டீ, ஏலக்காய் டீ போன்றவை சுவை மட்டுமின்றி வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தரக் கூடியது. ஆனால் தேயிலை கெட்டுப்போனால் தேநீரில் சுவையும் இருக்காது. ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது. தேயிலை கெட்டு போவதை எப்படி கண்டறியலாம் என இங்கு காணலாம்.
கெட்டுப் போன தேயிலை:
தேயிலையின் தரத்தை அதன் வாசனை, சுவை, நிறம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். தேயிலை கெட்டுப் போனால் அதன் நிறம், வாசனை, சுவை மாறிவிடும். நீங்கள் டீ போடும்போது வலுவான வாசனை இல்லை என்றால் நிச்சயம் அது கெட்டுபோயிருக்கலாம். ஏனென்றால் இலைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் ஆவியாகிவிட்டால் அதன் சுவை போய்விடும். இப்படி தேயிலையில் உள்ள எண்ணெய் பொருள்கள் ஆவியான பின்னர் அந்த இலைகளில் வீரியமோ, மணமோ இருக்காது.
கண்டறிவது எப்படி?
தேயிலை கெட்டுப் போனதை கண்டறிய எளிமையான வழி சுவை சோதனைதான். இந்த சோதனையில் கொஞ்சம் தண்ணீரில் தேயிலையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிக்கும்போது நல்ல ஸ்ட்ராங்கான டீ குடித்த உணர்வு வரவேண்டும். அப்படி வந்தால் அது பழைய தேயிலை இல்லை. நிறத்தை வைத்தும் தேயிலையின் தரத்தை அறியலாம்.
காலாவதியான தேயிலை!
எல்லா பொருள்களை போலவும் தேயிலைக்கும் காலாவதி தேதி உண்டு. இதனால் சுவை இல்லாமல் போய்விடுகிறது. நாளடைவில் அதன் தரம் மோசமாகிவிடும். ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படாத பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகள் சீக்கிரம் கெடக் கூடியவை. ஏனென்றால் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட தேயிலைகளில் நீண்ட நாள்கள் தரம் மாறாமல் இருக்கும்.
இதையும் படிங்க: டீ குடிச்ச உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ நீங்க 'இத' அவசியம் தெரிஞ்சிக்கனும்..!
கெடாமல் பாதுகாப்பது எப்படி?
தேயிலைகள் கெட வாய்ப்புள்ளதால் அவற்றை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். அதிக ஈரப்பதமான இடத்தில் தேயிலையை வைக்கக் கூடாது. அதிக ஈரப்பதம் தேயிலையை கட்டிப் பிடிக்க வைக்கும். காற்றுப் புகாத பாட்டில்களில் தேயிலையை போட்டு வைக்கலாம்.
இதையும் படிங்க: 1 ஸ்பூன் பேக்கிங் சோடா வைத்து.. டீ வடிகட்டியை 'இப்படி' சுத்தம் பண்ணா பளீச்னு ஆகிடும்!!
கெட்டுப் போன தேயிலையை எப்படி பயன்படுத்துவது?
தேயிலை கெட்டுப் போய்விட்டால் அதை தூக்கி எறியாமல் மற்ற வழிகளில் பயன்படுத்தலாம். துணிக்கு சாயமிட, நீரில் தேயிலையை போட்டு அந்த நிறத்தில் ஓவியம் தீட்டலாம். செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். சிலர் வாசனை, சுவை ஆகியவை இழந்த தேயிலையை சூப்கள் அல்லது குழம்புகளில் பயன்படுத்துகிறார்கள். பேஸ் பேக் போன்ற தோல் பராமரிப்பு விஷயங்களில் உபயோகிக்கலாம். முகத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க முக ஸ்பிரே தயாரிக்க தேயிலையை பயன்படுத்தலாம். கொஞ்சம் தேயிலை போய்ட்டு காய்ச்சிய நீரை ஆறவிட்டு முகத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.