தங்க நகைகளை வீட்டிலேயே புதுசு மாதிரி சுத்தம் செய்ய ஈஸி டிப்ஸ்!!
உங்களது பழைய தங்க நகைகள் புதுசு போல ஜொலிக்க அதை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

பெண்களுக்கு தங்க நகைகளின் மீது எப்போதுமே ஆசை அதிகமாகவே இருக்கும். அதனால் என்னவோ அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலவிதமான டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி குவிக்கிறார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை வாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளது.
ஆகவே வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தங்க நகைகளை நாம் அடிக்கடி அணியும் போது அவற்றில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தங்கி தங்கத்தின் நிறத்தை மங்கச் செய்து விடும். மங்கிய தங்க நகைகளை சிலர் தங்க நகையில் கொடுத்து பாலிஷ் செய்வார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அதிலிருந்து சிறிதளவு தங்கம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளன. மேலும் செலவும் அதிகம்.
இத்தகைய சூழ்நிலையில், பணம் ஏதும் செலவழிக்காமல் வீட்டிலேயே உங்களது பழைய தங்க நகைகளை புதியது போல ஜொலிக்க வைக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தக்காளி:
அரை பழுத்த தக்காளியை கால் பகுதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கி அதன் மீது சிறிதளவு உப்பு தூவி, தங்க நகைகள் மீது மெதுவாக கேட்கவும். பிறகு சுத்தமான நீரில் நகைகளை கழுவி மென்மையான பருத்தித் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும்.
பேக்கிங் சோடா;
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் சூடான நீரை ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதில் தங்க நகைகளை சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு பிரஷ் கொண்டு மெதுவாக சுத்தம் செய்தால் உள்ளே இருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.
டூத் பேஸ்ட்:
சூடான நீரில் நகைகளை நனைத்து அதில் சிறிதளவு டூத் பேஸ்ட் தடவி பிரஷ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் நகைகள் மீது இருக்கும் அழுக்கு நீங்கி, மீண்டும் பளபளக்கும்.
நினைவில் கொள்:
- தங்க நகைகளை அணிந்து கொண்டு வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
- பிற நகைகளுடன் சேர்த்து தங்க நகைகளை ஒருபோதும் வைக்க வேண்டாம்.
- தங்க நகைகளை அணிந்து குளிக்க வேண்டாம்.
- ஈரமான இடங்களில் தங்க நகைகளை வைக்க வேண்டாம்.