MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Water Bottle: வாட்டர் பாட்டில் எவ்ளோ கறையா இருந்தாலும் இனி பளபளக்கும்.. சூப்பர் கிளீனிங் டிப்ஸ்!

Water Bottle: வாட்டர் பாட்டில் எவ்ளோ கறையா இருந்தாலும் இனி பளபளக்கும்.. சூப்பர் கிளீனிங் டிப்ஸ்!

Water Bottle Cleaning: நாம் தினமும் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம். இந்த செய்தியில் வாட்டர் பாட்டிலை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 18 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்
Image Credit : stockPhoto

வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் எனப் பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர். நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தினால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அவற்றைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் அழுக்கு, பாக்டீரியா, கெட்ட நாற்றம் மற்றும் மஞ்சள் கறை படிந்து ஆரோக்கியத்திற்குத் கேடு விளைவிக்கும்.

ஆகவே, வீட்டிலேயே பாட்டிலை எவ்வாறு எளிதாகச் சுத்தம் செய்வது என்பதற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள். இது உங்கள் பாட்டிலைச் சுத்தம் செய்வது மட்டுமன்றி, புதியது போலப் பளபளப்பாகவும் மாற்றிவிடும். அத்துடன், எந்தக் கெட்ட நாற்றமும் அழுக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

இதையும் படிங்க:Fluffy Rice: சாதம் குழைஞ்சு போகுதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. இனி டென்ஷனே இல்ல!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உப்பும் எலுமிச்சையும் பயன்படும்
Image Credit : Social Media

உப்பும் எலுமிச்சையும் பயன்படும்

முதலில், ஒரு பிரஷ் வைத்து பாட்டிலின் உட்புறத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு, மென்மையான டிடர்ஜென்ட் அல்லது சோப்பைப் பயன்படுத்தி நுரை வரச்செய்து, பிறகு பிரஷ்ஷால் உள்ளே நன்றாகத் தேய்க்க வேண்டும். பாட்டிலைப் புதியது போல ஜொலிக்க வைக்க, உப்பும் எலுமிச்சையும் பயன்படுத்தலாம். பாட்டிலில் 1-2 ஸ்பூன் உப்பு போட்டு, அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்றாகக் குலுக்க வேண்டும். இது பாட்டிலைச் சுத்தம் செய்வது மட்டுமன்றி, பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றத்தையும் நீக்கிவிடும்.

இதையும் படிங்க:Toilet Seat: டாய்லெட் சீட் ஆடுதா? பிளம்பர் தேவையில்லை.. 1 ரூபாய் செலவு இல்லாம நீங்களே சரி பண்ணலாம்!

Related Articles

Related image1
Water Bottle: உங்க பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் அடியில் இந்த எண்கள் இருக்கா? உடனே தூக்கி வீசுங்க! ஆபத்து!
Related image2
Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!
34
பேக்கிங் சோடாவும் கைகொடுக்கும்
Image Credit : stockPhoto

பேக்கிங் சோடாவும் கைகொடுக்கும்

பாட்டிலைச் சுத்தம் செய்ய, 4 ஸ்பூன் வினிகர், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலக்குங்கள். பிறகு அதில் வெதுவெதுப்பான நீர ஊற்றி, 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். இது பாட்டிலை முழுமையாகச் சுத்தம் செய்து, பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றத்தை நீக்கிவிடும். பாட்டிலின் மூடி, ஸ்ட்ரா ஆகியவற்றையும் தனியாகச் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றினுள்ளும் பாக்டீரியா சேர வாய்ப்புள்ளது. இதற்கு பிரஷ், மென்மையான டிடர்ஜென்ட் கரைசல் மற்றும் நீர் பயன்படுத்திச் சுத்தம் செய்யுங்கள்.

இதையும் படிங்க:Airplane Facts: விமானங்கள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பது ஏன்? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

44
இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்
Image Credit : stockPhoto

இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

சூடான நீரைத் தவிர்க்கவும்: பிளாஸ்டிக் பாட்டில்களைச் சுத்தம் செய்ய கொதிக்கும் மிகச் சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. இது பிளாஸ்டிக்கை உருக்குவதுடன், அதில் உள்ள 'பிஸ்பெனால் ஏ' போன்ற தீங்கான வேதிப்பொருட்களை நீரில் கலக்கச் செய்துவிடும்.

முழுமையாக உலர வைக்கவும்: பாட்டிலைக் கழுவிய பிறகு மூடியைப் மூடாமல், தலைகீழாகக் கவிழ்த்து வைத்து காற்றோட்டமாக முழுமையாக உலர விட வேண்டும். ஈரம் தங்கி இருந்தால் மீண்டும் பாக்டீரியா மற்றும் கெட்ட நாற்றம் உருவாக வாய்ப்புள்ளது.

காலாவதி காலம்: பிளாஸ்டிக் பாட்டில்களில் கீறல்கள் ஏற்பட்டாலோ அல்லது நிறம் மாறினாலோ அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் (6 மாதம் முதல் 1 வருடம்) பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றி புதியதைப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
நீர் சேமிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fluffy Rice: சாதம் குழைஞ்சு போகுதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. இனி டென்ஷனே இல்ல!
Recommended image2
Parenting Tips: அப்பாக்களே கவனம்! மகன் தப்பு செய்தால் இந்த 5 விஷயங்களை சொல்லவே சொல்லாதீங்க
Recommended image3
Self-Perception: நம்மளையே நாம் தப்பா புரிஞ்சுக்கிற 5 இடங்கள்.. சைக்காலஜி சொல்வதை கேளுங்க!
Related Stories
Recommended image1
Water Bottle: உங்க பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் அடியில் இந்த எண்கள் இருக்கா? உடனே தூக்கி வீசுங்க! ஆபத்து!
Recommended image2
Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved