MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • செம்பு பாத்திரம் புதுசு மாதிரி மின்னனுமா? எலுமிச்சையுடன் இந்த பொருளை சேர்த்து தேய்த்தால் போதும்..

செம்பு பாத்திரம் புதுசு மாதிரி மின்னனுமா? எலுமிச்சையுடன் இந்த பொருளை சேர்த்து தேய்த்தால் போதும்..

செம்பு பாத்திரங்களை பளபளப்பாக வைத்திருக்க சில எளிய டிப்ஸுகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : Jan 30 2023, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

செம்பு (Copper) பாத்திரங்களில் உணவை எடுத்து கொள்வதாலும், நீரை அருந்துவதாலும் பல நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இன்றும் பல வீடுகளில் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் செம்பு பாத்திரத்தை புதிது போல வைத்திருப்பது எப்போதும் கொஞ்சம் கடினமான டாஸ்க். இனி அப்படி தயங்க தேவையேயில்லை. சில பொருள்களை மட்டும் பயன்படுத்தி செம்பு பாத்திரங்களை எப்படி ஜொலிக்க விடலாம் என இங்கு காணலாம்.  

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

டிப்ஸ் 1 

நம் சமையலறையில் இருக்கும் எலுமிச்சை, உப்பு ஆகிய இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து பிரஷ் கொண்டு செம்பு பாத்திரங்களை தேய்த்துவிடுங்கள். அந்த பாத்திரத்தின் அடியில், விளிம்புகளில் கறை கொஞ்சம் அடர்த்தியாக படிந்து காணப்படும். அங்கெல்லாம் உப்பு, எலுமிச்சை பேஸ்ட்டை தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு பிரஷால் நன்கு தேய்த்துவிடுங்கள். இதனை செய்து வர செம்பு பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை இல்லையென்றால் வினிகரை பயன்படுத்தலாம்.

34

டிப்ஸ் 2 

உப்புடன் எலுமிச்சையை எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படியே வினிகரை உபயோகித்தால் போதும். சில துளிகள் வினிகரில் உப்பு கலந்து அது நன்கு கரைந்ததும் செம்பு பாத்திரங்களை தேய்க்கவும். 

இதையும் படிங்க: தலையணை உறையை துவைக்காமல் அழுக்காகவே பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து தெரியுமா?

44

டிப்ஸ் 3 

கடையில் வாங்கும் கெட்ச் அப் செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதில் நல்ல பலனை தரும். இதில் உள்ள அமிலத்தன்மை செம்பு பாத்திரத்தின் மீது உள்ள அழுக்கை நீக்கும். பாத்திரத்தில் கொஞ்சம் கெட்ச் அப்பை தடவி சில நிமிடங்கள் ஊற வையுங்கள். மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு பாத்திரத்தை தேய்த்தால் கறைகள் அப்படியே நீங்கும். செம்பு பாத்திரத்தை தேய்த்து கழுவிய பின்னர் ஆலிவ் ஆயிலை துணியில் நனைத்து பாத்திரத்தின் மீது தடவி கொள்ளுங்கள். இப்படி செய்தால் பளபளக்கும் செம்பு பாத்திரத்தின் தோற்றம் உங்களை வியக்க வைக்கும்.  

இதையும் படிங்க: இந்திய இளைஞர்களிடம் குறையும் உயிர்ச்சத்து.. அதிர வைக்கும் ஆய்வு ரிப்போர்ட் வெளியானது..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
சமையலறை குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Recommended image2
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Recommended image3
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved