- Home
- Lifestyle
- Kitchen Sink : கிச்சன் சிங்க் அடிக்கடி அடைச்சுக்குதா? இதோ நச்சுனு '4' டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க
Kitchen Sink : கிச்சன் சிங்க் அடிக்கடி அடைச்சுக்குதா? இதோ நச்சுனு '4' டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க
கிச்சன் சிங்கின் அடைப்பை நீக்க சில எளிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Kitchen Sink Clog Home Remedy
சமையலறையில் இல்லத்தரசிகள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை எதுவென்றால் சிங்கில் தண்ணீர் தேங்கி நிற்பது தான். இந்த பிரச்சனை ஒவ்வொரு வீட்டிலும் பொதுவானது தான். இது பெரும் தொந்தரவாகவே இருக்கும். சிங்கிள் பாத்திரம் கழுவும் போது அல்லது குழந்தைகள் மீந்தமான உணவுகளை சிங்கிள் போடுவதால் அடைப்பு ஏற்படுகின்றது. சரி இந்த பிரச்சனையை தீர்க்க சில எளிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
உப்பு பயன்பாடு
கிச்சன் சிங்கிள் அடைப்பை போக்க உப்பு பயன்படுத்தலாம் இதற்கு சிங்கிள் உப்பு போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள் பிறகு சூடான நீரைக் கொண்டு சிங்க் முழுவதும் கழுவவும். பிறகு ஒரு பிளம்மிங் கம்பியை பயன்படுத்தி மெதுவாக சுழற்றி அழுத்தினால் அடைப்பட்ட அழுக்குகள் போய்விடும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர் :
இதற்கு சிங்கில் அரை கப் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சேர்க்கவும். இந்த இரண்டு கலவை ஒன்று சேரும்போது நுரை வர ஆரம்பிக்கும். சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு சூடான நீரை சிங்கிள் ஊற்றினால் அடைப்பு நீங்கிவிடும். தண்ணீரும் எளிதாக பாயும்.
கிச்சன் சிங்கில் அடைப்பு வராமல் இருக்க :
- கிச்சன் சிங்கிள் அடைப்பு மற்றும் துர்நாற்றம் வீசுவதே தவிர்க்க விரும்பினால் தினமும் ஜிங்கை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
- மீதமான உணவுகளை சிங்கிள் போடுவதை தவிர்க்க வேண்டும்.
- மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிங்க் பைப்பை மாற்றுங்கள். ஏனெனில் அதன் உள்ளே பாசி மற்றும் அழுக்குகள் குவிந்து இருந்தால் சிங்கிள் அடைப்பு மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிக முயற்சிக்கு பிறக்கும் சிங்கிள் அடைப்பு ஏற்பட்டால் ஒரு பிளம்மரை அழைத்து சரி செய்யுங்கள். ஏனெனில் சில சமயங்களில் இருக்கும். மேலே சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி கிச்சன் சிங்கை எளிதாக சுத்தம் செய்யலாம்.