டூவீலர் ஓட்டுவதால் பின்னியெடுக்கும் முதுகுவலி.. எப்படி சமாளிப்பது?
இருசக்கர வாகனங்களில் பயணிப்பதால் சிலருக்கு கடும் முதுகுவலி ஏற்படும். அதை சமாளிப்பது குறித்து காணலாம்.
வேலைக்கு செல்லும் பலருக்கும் வாகனம் ஓட்டுவது அவசியமான ஒன்றாகி விட்டது. இதனால் முதுகுவலி ஏற்படுவதாக அவர்களில் பலரும் தெரிவிக்கின்றனர். அதாவது ரொம்ப தூரம் இருசக்கர வாகனங்களை இயக்கும் பலருக்கும் முதுகுவலி பிரச்சனை இருக்கிறது. எப்போதாவது வலி ஏற்பட்டால் பரவாயில்லை. பொறுத்து கொள்ளலாம். ஆனால் தினம் தினம் வலி என்றால்? என்ன தான் தீர்வு..வாருங்கள் காணலாம்.
டூவீலர் ஓட்டுவது முதுகுவலிக்கு ஒரு காரணமாக தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு நாளில் குறைந்தது 50 முதல் 60 கிமீ பயணிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பணி நிமித்தமாக செல்வதாக இருந்தால் தவிர்ப்பது சிரமம் தான். இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் முதுகு வலி ஏற்படுகிறது என்றால், முதலில் அமர்ந்து வாகனம் ஓட்டும் தோற்ற பாங்கை (posture) கவனிக்க வேண்டியது அவசியம்.
தற்போதைய டிரெண்ட்.. மாடர்ன் தோற்றத்தை கொண்டுள்ள டூவீலர்களை ஓட்டுவதுதான். 20 வயதில் இளைஞருக்கு அந்த பைக் ஓ.கேவாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதை ஓட்டினால் பாதிப்புதான். நீங்கள் ஓட்டும் பைக் உங்களுக்கு எல்லாவிதத்திலும் வசதியாக இருக்க வேண்டும். அமர்ந்து ஓட்ட வசதியாக இருக்கிறதா, ஓட்டும்போது ஏதேனும் அசௌகர்யம் ஏற்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். முதுகை வளைத்து அசௌகர்யமாக உட்காந்து பைக் ஓட்டினால் வலி உறுதி.
டூவீலர் ஓட்டுவதை உங்களால் தவிர்க்கவே முடியாது என்றால் முதுகுப் பகுதியை வலுவாக்கும் சிறிய உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளர் மூலம் தெளிவாக அறிந்து கொண்டு அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் இந்தப் பயிற்சிகளை செய்வதை பழக வேண்டும். தினமும் வீட்டுக்கு வந்ததும் முதுகுப் பகுதிக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மறக்காமல் செய்துவிட வேண்டும். அதன் பின்னர் வேறு வேலைகளை பார்த்து கொள்ளலாம். முதுகு முக்கியம்...
मरकटासन
சப்ட மத்சிந்த்ராசனா (two knee spinal twist), சலம்ப புஜங்காசனா (sphinx pose) யோகாசனத்தை செய்யும்போது முதுகு பலப்படுகிறது. இதனால் முதுகுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். இங்கு படங்களில் காட்டப்பட்டுள்ள மாதிரி எளிய யோகாவை கற்று கொண்டு தினமும் செய்யுங்கள்.
இதையும் படிங்க: முளைகட்டிய தானியங்களில் கொட்டி கிடக்கும் சத்துக்கள்.. காலையில் எப்படி சாப்பிடணும்.. எப்படி சாப்பிடக்கூடாது..!
ரொம்ப வருடங்களாக டூவீலர் ஓட்டுபவர் என்றால் முதுகுப் பகுதியில் எலும்பு தேய்ந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் வலியும் ஏற்படலாம். அவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பொதுபோக்குவரத்தை பயன்படுத்தலாம் அல்லது பணியிடத்திற்கு அருகில் வீடு பார்த்து செல்லலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட பிறகு வலியை நிரந்தரமாக நிறுத்த முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் முதலில் உடற்பயிற்சிகளை தொடங்குங்கள்.
இதையும் படிங்க: தினமும் சுடு தண்ணீர் பருகும் பழக்கம் வைத்து கொண்டால்.. காலையில் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?