MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!! 

வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!! 

10 Minutes Walking Benefits : தினமும் 10 நிமிடங்கள் நடப்பது வாழ்க்கையை எப்படி மாற்றும் என இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 28 2025, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!!

வாழ்க்கையை மாற்றும் '10' நிமிட வாக்கிங்.. பலர் அறியாத சூப்பர் ட்ரிக்!!

உங்களால் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் வெறும் பத்து நிமிடங்கள் நடந்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். 10 நிமிடங்கள் என்பது செய்ய முடியாத இலக்கு அல்ல. யார் வேண்டுமானாலும் 10 நிமிடங்கள் நடக்கலாம்.  குறைந்த தாக்கத்தை கொண்ட பயிற்சிகளில் நடைப்பயிற்சி ஒன்றான இது இதயம், நுரையீரல் ஆகியவற்றை நன்கு இயங்க வைத்து இயக்கத்தை பராமரிக்கிறது. உங்களுக்கு வயதாகும்போது இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக வைத்திருக்க இது உதவும். ஒவ்வொரு நாளிலும் இரண்டு முறை 10 நிமிடங்கள் நடப்பது கூட போதுமானது. 

25
10 நிமிடங்கள் நடப்பதன் நன்மைகள்:

10 நிமிடங்கள் நடப்பதன் நன்மைகள்:

தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் 10 நிமிடங்கள் முறையே 30 நிமிடங்கள் நடக்கலாம். உடல் பருமன் அதிகரிக்காமல் எடை கட்டுக்குள் இருக்கும். மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கும். கொலஸ்ட்ரால் இருந்தால் அதை குறைக்க நல்ல பயிற்சி. செரிமானத்தை மேம்படுத்தும். சாப்பிட்ட பின்னர் 10 நிமிடம் குறுநடை போடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். மனநிலையை சீராக்கி மனச்சோர்வை தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க 10 நிமிட நடை உதவுகிறது. 

இதையும் படிங்க:  எடையை குறைக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

35
ஆயுள் நீட்டிப்பு:

ஆயுள் நீட்டிப்பு:

2017இல் வெளியான சர்குலேஷன் இதழின் ஆய்வில், நடைபயிற்சி  மரணத்தின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிவித்தது. தினமும் நடந்தால் எலும்பு அடர்த்தியை பராமரிக்க முடியும். எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன. வயதான பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கம் குறையும். 

இதையும் படிங்க:  இப்படி 'வாக்கிங்' போறது தெரியுமா? உடலை இரும்பாக்கும் '4' முறைகள்!!

45
சூப்பர் ட்ரிக்:

சூப்பர் ட்ரிக்:

வாக்கிங் செல்வது உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவு பழக்கத்தை கட்டாயம் மாற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது எவ்வளவு அவசியமோ அதே போலவே அளவாக உண்பதும் அவசியம். நீங்க சாப்பிடுவதை விட அதிக கலோரிகளை உடற்பயிற்சியினால் எரிக்கும் போது மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். குறைந்த கலோரி உணவுகள் உண்பதால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம். 

- வாரம் இரண்டு நாள்கள் வலிமை பயிற்சிகள் (strength training)
- குறைந்த கலோரி உணவுகள்
- நடையில் வேகத்தை அதிகரித்தல்

55
வாக்கிங் எப்படி வாழ்க்கையை மாற்றும்?

வாக்கிங் எப்படி வாழ்க்கையை மாற்றும்?

நீங்கள் மதிய உணவு இடைவேளையில் அல்லது மாலை நேரங்களில் நடக்க முயற்சி செய்யலாம். தினமும் 10 நிமிடங்கள் நடப்பது ஒரு எளிமையான பழக்கமாகும்.  உங்கள் நண்பர்களை சந்திக்க செல்வது அல்லது அவர்களுடன் உரையாடிக் கொண்டே நடப்பது கூடுதலான உத்வேகத்தை அளிக்கும். நடைப்பயிற்சியை சுவாரசியமாக மாற்றவும், கூடுதல் பலன்களை பெறவும் ஒரு நிமிடம் நடப்பது 30 வினாடிகள் ஓடுவது என பயிற்சி செய்யலாம். நடக்கும்போது உற்சாகமாக இருப்பீர்கள். அமர்ந்த நிலையில் வெகுநேரம் வேலை செய்பவர்கள் நடக்கும்போது உடலுக்கு நல்ல இயக்கமாக இருக்கும். மனநிலை சீராக உதவும் ஹார்மோன்கள் சுரக்கும். நீங்கள் 30 நிமிடங்களோ, 40 நிமிடங்களோ நடந்தாலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் அதிக வேகத்துடன் அதிக வேகத்தைக் கடக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள். அப்படி நடப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வேகமான நடை சிறந்த இயக்கமாக இருக்கும். எடையை குறைக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved