- Home
- Lifestyle
- No Expiry Date Foods : கெட்டே போகாத உணவுப் பொருள்கள் இருக்கா? எத்தனை மாசமானாலும் பயன்படுத்தலாம்!!
No Expiry Date Foods : கெட்டே போகாத உணவுப் பொருள்கள் இருக்கா? எத்தனை மாசமானாலும் பயன்படுத்தலாம்!!
நாம் கிச்சனில் பயன்படுத்தும் சில உணவு பொருட்கள் ஒருபோதும் காலாவதியாகாதாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

No Expiry Date Foods
பொதுவாக ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் வெவ்வேறு ஆயுட்காலம் இருக்கும். சில பொருட்கள் ஒரு சில நாட்கள் வரை நீடிக்கும். இன்னும் சில பொருட்களோ சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அப்படி நாம் கிச்சனில் பயன்படுத்தும் சில பொருட்கள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் இருக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உப்பு :
உப்பு சமையலறையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். எல்லா வகையான உணவுகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இதை சரியான முறையில் சேமித்து வைத்தால், கெட்டுப்போகாது. நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.
சர்க்கரை
சர்க்கரை அன்றாட பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். இதை சரியான ஜாடியில் வைத்து சேமித்து வைத்தால் நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதற்கு கண்ணாடி ஜாடியில் வைத்து சேமிக்க வேண்டும். எப்போது இதை உணர்ந்த கரண்டியால் மட்டுமே எடுக்க வேண்டும். சர்க்கரை டப்பாவை ஈரப்பதத்திலிருந்து விலக்கி வைக்கவும். முக்கியமாக சர்க்கரையின் அமைப்பு மாறுமே தவிர, அது ஒருபோதும் காலாவதி ஆகாது.
தேன் :
தேனில் மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் குறைந்த அமிலத் தன்மை கொண்ட பி.எச் உள்ளதால் ,இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும். இதனால் தேன் நீண்ட காலம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
வினிகர் :
ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளை வினிகர் போன்ற எந்த வகையான வினிகர் வகைகளும் பல ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஏனெனில் அவை இயற்கையாகவே சுய பாதுகாப்பு கொண்டுள்ளன.
சோள மாவு :
பொதுவாக சூப், கிரேவி மற்றும் சாஸ்களை தடிமனாக்க தான் சோள மாவு பயன்படுத்தப்படுகின்றது. இதுதவிர சிக்கன், மீன் மற்றும் காய்கறிகள் வறுக்கும் முன் அதை மிருதுவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. சோள மாவை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைத்தால் கெட்டுப்போகாது. அதுபோல காற்று புகாத கண்ணாடி ஜாடியில் இதை சேமித்து வைத்தால் நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.
சோயா சாஸ் :
பிரைட் ரைஸ், சைனீஸ் நூடுல்ஸ் தயாரிப்பதற்கு சோயா சாஸ் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு சோடியம் உள்ளதால் இதை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம். ஆனால் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும். அப்போதான் நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் மைதா மாவு அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால் அவற்றை நீண்ட நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால் ஈரப்பதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். மேலும் அவற்றை குளிர்ந்த மற்றும் வறண்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால் பாக்கெட்டில் இருக்கும் நூடுல்ஸை ஒரு முறை திறந்தால் அது நீண்ட காலம் வரை நீடிக்காது, கெட்டுப் போகும்.