- Home
- Lifestyle
- Soak Foods : இந்த 5 உணவுகளை சும்மா சாப்பிடக் கூடாது! ஊற வைத்தால் தான் ஊட்டச்சத்துக்களே கிடைக்கும்
Soak Foods : இந்த 5 உணவுகளை சும்மா சாப்பிடக் கூடாது! ஊற வைத்தால் தான் ஊட்டச்சத்துக்களே கிடைக்கும்
ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் ஊற வைக்க வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.

Foods Not To Eat Without Soaking
பொதுவாக உணவுகளை சமைப்பதற்கு என சில விதிமுறைகள் இருக்கின்றது. வறுத்தல், பொரித்தல், பேக்கிங், வேக வைப்பது, டிப் ஃப்ரை செய்வது போன்ற முறைகளை பயன்படுத்தி நாம் உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுவது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கும். ஆனால் சில குறிப்பிட்ட வகை உணவுகளை சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் அப்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குயினோவா
குயினோவா முழு தானியங்களில் ஒன்றாகும். இதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்கள் நீக்கி, உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அனுமதிக்கும். மேலும் ஜீரணிக்கவும் எளிதாக்கும். அதுபோல முழு தானியங்களை ஊற வைத்து சாப்பிட்டால் தான் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக அவற்றை ஒருபோதும் எண்ணெயில் வறுத்து சாப்பிடக்கூடாது. முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிட்டால் செரிமான கோளாறு பிரச்சனை ஏற்படும்.
நட்ஸ்கள் மற்றும் விதைகள்
நாட்கள், விதைகள் மற்றும் கொட்டைகளை ஊறவைத்து சாப்பிட்டால் அவற்றில் இருக்கும் பைட்டிக் அமிலம் குறைந்து நொதிகளை செயல்படுத்தும் மற்றும் எளிதாக ஜீரணமாகும். முக்கியமாக அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் முழுமையாக அப்படியே கிடைக்கும். எனவே இவற்றை ஊற வைத்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் ஊட்டச்சத்துக்களின் மூலமாகும். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிட்டால் அவை மென்மையாகி சுவையை மேன்மைப்படுத்தும். மேலும் ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்யும்.
அரிசி
பைட்டிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக அரிசியில் இருப்பதால், அதை ஊற வைத்து சமைத்தால் ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருள் நீக்கப்பட்டு, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும். முக்கியமாக சமைக்கும் நேரமும் மிச்சமாகும் மற்றும் ஊறவைத்து சமைத்த அரசின் அமைப்பும் நன்றாகவும் இருக்கும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ், வேர்க்கடலை, கொண்டைக்கடலை, பருப்பு போன்ற பருப்பு வகைகளை ஊற வைத்தால் அவை மென்மையாகி சமைப்பதை எளிதாக்கும். மேலும் அதன் ஊட்டச்சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.