நயன்தாரா இவ்வளவு அழகாக இருக்க இவைகளே காரணம்....அவரின் அழகு ரகசியங்கள் இதோ..!!
நாட்கள் கடந்தாலும் காலத்தால் அழியாத அழகுடன் ஜொலிக்கிறார் கதாநாயகி நயன்தாரா. அவரது அழகு ரகசியம் பற்றி இங்கே..
நயன்தாரா... இந்தப் பெயரை விரும்பாத சினிமா ரசிகன் இல்லை. மலையாளக்குட்டியான இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகிலும் டாப் ஹீரோயினாக நல்ல பெயரைப் பெற்ற நடிகை.
இளைஞர்களின் கனவுகளின் ராணியாகவும், தன் அழகால் க்ரேஸி ஸ்டாராகவும் தனக்கென உரிய ஸ்டைலில் தனித்து நிற்கிறார் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குனர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. திருமணமான சில மாதங்களிலேயே இரண்டு குழந்தைகளுக்கு வாடகைத் தாயானார். இது அப்போது சர்ச்சையானது என்பது தெரிந்ததே.
இதையும் படிங்க: அழகில் தேவதையாய் ஜொலிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை...சோபிதா-துளிபாலாவின் பியூட்டி சீக்ரெட் தெரியுமா..?
நயன்தாராவுக்கு இப்போது நாற்பதை நெருங்குகிறது. இருப்பினும், அவரது வற்றாத அழகு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
திரையுலகில் நுழைந்தது முதல் எவ்வளவு அழகாகக இருந்தாரோ இப்போதும் அதே அழகில் ஜொலிக்கிறார். வயதுக்கு மீறிய அழகின் ரகசியம் என்ன என்று ஒவ்வொரு திரையுலகினரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
நயன்தாரா தனது அழகுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா தனது அழகை பராமரிக்க ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்களையே அதிகம் பயன்படுத்துவாராம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்க நிறைய இளநீர் குடிப்பாராம்.
வெளியில் சென்றால் சன் ஸ்க்ரீன் லோஷனை போடுவாராம். சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தாமல் ஒரு நாளும் வெளியே செல்ல மாட்டாராம்.
இதையும் படிங்க: திரையுலகின் மோஸ்ட் வான்டேடு பியூட்டி - 10 வருடத்தில் 50 ஐ தொட்ட 'காஜல் அகர்வால்
சன் ஸ்கிரீனுடன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவாராம். சருமத்தை அழகாகவும் மென்மையாகவும் மாற்ற மாய்ஸ்சரைசர் உதவுகிறது.
மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் எடுத்துக்கொள்வாராம். தனது அழகின் ரகசியம் இவைகளே என்கிறார் நயன்தாரா.