- Home
- Lifestyle
- Nervous system: உங்கள் நரம்புகள் வலுப்பெற உதவும் சூப்பர் உணவுகள்! கட்டாயம் மிஸ் பண்ணீடாதீங்கோ..
Nervous system: உங்கள் நரம்புகள் வலுப்பெற உதவும் சூப்பர் உணவுகள்! கட்டாயம் மிஸ் பண்ணீடாதீங்கோ..
Nervous system: நரம்பு மண்டலத்தை ஒருவர் வலிமையாக வைத்திருக்க எந்தெந்த உணவுகளை உங்கள் டயட் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

Nervous system
நரம்பு மண்டலம் தான் நமது நரம்பு முனைகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புகிறது. நரம்புகள் தான் ஒருவரது உணர்வுகளை வெளிப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. அத்தகைய நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, இத்தகைய நரம்பு மண்டலத்தை ஒருவர் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், அன்றாடம் நம்முடைய உணவு மற்றும் வாழ்கை முறை மாற்றத்தில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்..
Nervous system
கொழுப்பு அமிலங்கள்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம். விதைகள் மற்றும் நட்ஸ் வால்நட்ஸ், மீன்கள், பாதாம், ஆளி விதைகள் போன்றவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. எனவே, இந்த கொழுப்பு அமிலங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Nervous system
முழு தானியங்கள்:
முழு தானியங்களான கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் பி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்.
Nervous system
பச்சை காய்கறிகள்:
வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன. இது தான் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவான நரம்பு மண்டலத்துடனும் இருக்க, பச்சை காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Nervous system
உலர் பழங்கள்
உலர் பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது ஒருவருக்கு, நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும். ஏனெனில், உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.