Constipation: மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்ப்படுத்துதா..? இதில் இருந்து நிரந்தரமாக விடுபட ஈஸியான வழிமுறைகள்..
Solution for Constipation: நம்மில் பலரும் தினமும் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறோம். இதில் இருந்து நிரந்தரமாக விடுபட ஈஸியான வீட்டு வைத்திய குறிப்புகள், இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்..
Constipation:
மலச்சிக்கல் பிரச்சனை ஆனது, நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும். மேற்கத்திய துரித உணவுகளை உட்கொள்வது ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனையை உண்டு பண்ணும்..அதேபோன்று, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள் ஆகும்.
எனவே, நீங்கள் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை எதிர்கொள்பவராக இருந்தால், இந்த வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கலாம்.
castor oil
ஆமணக்கு எண்ணெய்:
விளக்கெண்ணெய், மலச்சிக்கலைப் போக்க அமைதியான மலமிளக்கி. இதில், உள்ள ரிசினோலிக் அமிலம் மலச்சிக்கலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குடலின் அசைவுகளை அதிகரிக்க உதவும். எனவே, மலச்சிக்கலை நீக்க 10 முதல் 15 மில்லி ஆமணக்கு எண்ணெய் போதும். விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம்.நிறைய தண்ணீர் மற்றும் மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும்.
Constipation:
சமையல் சோடா
பேக்கிங் சோடா மலச்சிக்கலை சரிசெய்வதில் சிறந்த பங்களிப்பை தர வல்லது. பேக்கிங் சோடா வயிற்றில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைத்து, செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது. இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.
Constipation:
நெய்:
நெய் மலச்சிக்கலைப் போக்க வல்லது. நெய் நம் உடலை மற்றும் குடல் பாதையை சுத்தமாக வைத்திருக்கும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அன்றாடம் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Constipation:
சூடான பானங்கள்
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகுறீர்கள் என்றால், காபி குடிப்பது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நார்சத்து கொண்ட உணவுகள்:
நார்ச்சத்து கொண்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது..நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உணவுகள் நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, செரிமானத்தைச் சிறப்பாக்கக்கூடியவை.
Constipation:
புரோபயாடிக்
உங்கள் செரிமான அமைப்பில் பாக்டீரியாவின் சரியான சமநிலையை வைத்திருப்பதும் முக்கியம். எனவே, புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை குணப்படுத்தும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும் நல்ல பாக்டீரியாக்கள் ஆகும்..அதேபோன்று,அதிகப்படியான உடற்பயிற்சி, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது சிறந்த நிவாரணம் அளிக்கும்..