MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சாப்பிடும் போது இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்டா இருக்காதீங்க; புற்றுநோயாக இருக்கலாம்!

சாப்பிடும் போது இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்டா இருக்காதீங்க; புற்றுநோயாக இருக்கலாம்!

Cancer Symptoms : புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம். சாப்பிடும் போது கூட சில புற்றுநோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த அறிகுறிகள் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சல் என்று தவறாக கருதப்படுவதால், இது பெரும்பாலும் நோயறிதலை தாமதப்படுத்தும்.

3 Min read
Author : Ramya s
Published : Sep 04 2024, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோய் ஒன்றாகும். ஏனெனில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், பின்னர் சிகிச்சை அளிப்பது கடினம். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. எனவே அறிகுறிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கும், ஏனெனில் அவை பெரும்பாலும் உடலுக்குள் ஏற்படுகின்றன, எனவே அவை எளிதில் புலப்படாது.

ஆனால் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம். இதனால் நோய்க்கு சிகிச்சையளிப்பது எளிது. நீங்கள் சாப்பிடும் போது கூட சில புற்றுநோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த அறிகுறிகள் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சல் என்று தவறாக கருதப்படுவதால், இது பெரும்பாலும் நோயறிதலை தாமதப்படுத்தும். எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம்

குறிப்பாக கணைய புற்றுநோயால் பல்வேறு செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உணவு நேரத்தில் கவனிக்க வேண்டிய சில பொதுவான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

1. விழுங்குவதில் சிரமம் 

சாப்பாட்டை விழுங்கும் போது வலி அல்லது அசௌகரியம் மற்றும் உணவு தொண்டை அல்லது மார்பில் சிக்கியது போன்ற உணர்வு கவனிக்கப்பட வேண்டிய ஒரு அறிகுறியாகும். இது பெரும்பாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற விழுங்கும் பிரச்சினைகளாக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது தொண்டை புற்றுநோய் அல்லது வயிற்று புற்றுநோயைக் குறிக்கலாம்.

2. தொடர்ந்து அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல்

மார்பு அல்லது வயிற்றில் எரியும் உணர்வு, வீக்கம், அடிக்கடி துர்நாற்றம் வீசுதல் ஆகியவை புற்றுநோயைக் குறிக்கலாம். இதுவும் நெஞ்செரிச்சல் இரைப்பை அழற்சி அல்லது வயிற்றுப் புண்கள் என தவறாக கண்டறியப்படலாம், ஆனால் இந்த அறிகுறிகள் வயிற்று புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவற்றைக் குறிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

3. விரைவில் நிரம்பிய உணர்வு

சிறிதளவு உணவை மட்டுமே சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பியதாக உணர்ந்தால், இது கவனிக்க வேண்டிய மற்றொரு அறிகுறியாகும். பொதுவாக இது வயிற்றுப் புண்கள் அல்லது மோசமான பசியின்மை ஆகிய பிரச்சனைகள் என்று கருதப்படலாம். ஆனால் இது பெரும்பாலும் கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.

35
five signs of colon cancer

five signs of colon cancer

குமட்டல் அல்லது வாந்தி

அடிக்கடி குமட்டல், சாப்பிட்ட உடனேயே வாந்தி, அல்லது இரத்த வாந்தி ஆகியவை இருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை உணவு விஷம், இரைப்பை அழற்சி அல்லது ஒற்றைத் தலைவலி ஆகியவற்றின் அறிகுறிகள் என்று தவறாக புரிந்துகொள்ளப்படலாம். ஆனால் இது கணைய புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டிகளின் ஆரம்ப அறிகுறியாகும்

விவரிக்க முடியாத எடை இழப்பு

சாதாரண அல்லது குறைந்த பசியின்மை இருந்தபோதிலும், எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் உடல் எடை வேகமாக குறைந்தால் கவனிக்க வேண்டிய ஒன்று. இது மன அழுத்தம், ஹைப்பர் தைராய்டிசம் அல்லது உணவு மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் இது வயிறு, கணைய புற்றுநோய், உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அறிகுறியாகும்.

45
...

...

6. வயிற்று வலி அல்லது அசௌகரியம்

அடிவயிற்றில் தொடர்ந்து அல்லது கடுமையான வலி, குறிப்பாக சாப்பிட்ட பிறகு இருந்தால் அது எச்சரிக்கை அறிகுறியாகும். இது பெரும்பாலும் பித்தப்பைக் கற்கள், ஐபிஎஸ் அல்லது வயிற்றுப் புண்கள் என கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால் இது கணைய புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும், குறிப்பாக நீங்கள் படுக்கும்போது மோசமாக இருந்தால், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் என ஏதேனும் ஒரு வகை புற்றுநோயாக இருக்கலாம்.

குடல் பழக்கத்தில் மாற்றம்

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் நிலைத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மலம் கழிப்பது மற்றொரு சிவப்புக் கொடியாகும். பலர் இதை உணவு அலர்ஜி, உணவு சகிப்புத்தன்மை என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் கணைய புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.

55
cancer risk

cancer risk

மஞ்சள் காமாலை

குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்ட பிறகு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல், அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் வெளிர் மலம் ஆகியவற்றைக் கவனிக்கவும். இது பெரும்பாலும் ஹெபடைடிஸ், பித்தப்பை அல்லது கல்லீரல் நோய் என்று தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் இது கணைய புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் பித்த நாள புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும்.

இந்த அறிகுறிகளில் பல நெஞ்செரிச்சல், மன அழுத்தம். வயிறு பிரச்சனை போன்ற சிறிய பிரச்சனைகளாக முதலில் ஏற்படலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் 10 நாட்களுக்கு அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் ஒரு சுகாதார நிபுணரிடம் பேசுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 10 நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், அது புற்றுநோயாக இருக்கலாம். எனவே புற்றுநோயின் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
புற்றுநோய்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved