மக்களே வீட்டை வாசனையா வைக்கும் Air Freshener யூஸ் பண்றீங்களா? இந்த ஆபத்துகள் வரலாம்
வீடு நறுமணமாக இருக்க ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீடு முழுவதும் வாசனை வீச ஏர் ஃப்ரெஷ்னர் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அது காற்றில் கலந்து நறுமணம் தருவது மட்டுமின்றி, அதில் கலந்திருக்கும் ஆபத்தான ரசாயனங்கள் நம்முடைய சுவாச பாதையில் சென்று நம் உடலுக்கு பலவிதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும் தெரியுமா? அந்த வகையில், ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவதால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. ஏர் ஃப்ரெஷ்னரில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் அதை தினமும் சுவாசித்து வந்தால் நாள்பட்ட பிரச்சனைகளான ஆஸ்துமா, சுவாச பிரச்சினை போன்றவை வரும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
2. ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்தும்போது அது வெளியிடும் ரசாயனங்கள் கண், தொண்டை, நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் நீண்ட கால பயன்பாடானது கல்லீரல், கிட்னியை பாதித்துவிடும்.
3. ஏர் ஃப்ரெஷ்னரில் காணப்படும் ரசாயனங்கள் ஹார்மோன் சுரப்பியில் தலையிட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். இதனால் இனப்பெருக்க ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
4. ஏர் ஃப்ரெஷ்னர் மனிதர்களாக நமக்கு மட்டுமல்ல நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய் பூனை மற்றும் பறவைகளுக்கு கூட எமனாக மாறிவிடும். சுவாசிப்பதில் சிரமம், தும்மல், இருமல், சருமத்தில் எரிச்சல், நடத்தையில் மாற்றம் போன்றவை அவற்றின் அறிகுறிகள் ஆகும்.
5. ஏர் ஃப்ரெஷ்னர் காற்றின் தரத்தை முற்றிலும் மோசமாக்கி விடுகிறது. எனவே அதை தினமும் சுவாசித்தால் பிறகு நாள்பட்ட சுவாச பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
6. ஏர் ஃப்ரெஷ்னர் வீட்டில் அடிக்கும் நாற்றத்தை மட்டுமே மறைக்க செய்யும் முறை தவிர, துர்நாற்றத்தை வெளியேற்றாது. இதனால் காற்றின் தரம் ரொம்பவே மோசமாக இருக்கும்.
வீடு நறுமணத்திற்கு சில இயற்கை வழிகள் :
- வீட்டில் நறுமண வீச ஊதுபத்தி அல்லது சாம்பிராணி பயன்படுத்தலாம்.
- அதுபோல இந்த செடிகளை வாங்கி வைக்கலாம்.
- ஹோம் மேட் ஸ்பிரே தயாரித்து பயன்படுத்தலாம்.