- Home
- Lifestyle
- Health Tips: பெண்கள் 'ப்ரா' அணிவது அவசியமா..? பரவி வரும் வதந்திகள்...பிரபல மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..
Health Tips: பெண்கள் 'ப்ரா' அணிவது அவசியமா..? பரவி வரும் வதந்திகள்...பிரபல மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..
Health Tips: பெண்கள் 'ப்ரா' அணிவது அவசியமா..? பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் வருமா..? உங்களின் குழப்பங்களுக்கு பிரபல மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்.

இன்றைய நவீன உலகில் ''பேஷனாக'' உடை அணிவது மக்களால் விரும்பப்படுவதால், உள்ளாடைகள் பல்வேறு மாறுதல்களை உருவாக்கி வருகிறது. உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்தும் அமையும். ப்ரா ஒரு பொதுவான ஆடையாக இருந்தாலும், இதனைச்சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ப்ரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது முற்றிலும் பொய்யானது கட்டாயம் பெண்கள் பிரா அணிய வேண்டும் என சொல்லப்பட்டுகிறது. இது தொடர்பான மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம்.
bras
1. பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு, உடற்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யும் போது ப்ரா அணிவது முக்கியமானது என தெரிவித்துள்ளனர். இது உடலுக்கு நல்லது எனவும் மார்பகங்களை தொங்கவிடாது எனவும் தெரிவித்துள்ளர்.
2. மேலும், பிரா அணிவதால் மார்பக புற்றுநோய்கள் வராது என்றும் குறிப்பாக, கருப்பு நிற ப்ராக்களை அணிவது உடலுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளனர்.
bras
3. ஆம், பெரிய, கனமான மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு அதன் அடியில் உள்ள தசைகளில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும், இது மார்பு, முதுகு மற்றும் தோள்பட்டை வலிகளை ஏற்படுத்தும். எனவே, பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு, ப்ரா அணிவதால் முதுகு வலி குறைகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
bras
4. இது ஒருபுறம் இருக்க, பெண்களைப் பொறுத்தவரை மார்பக அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது நல்லது. இதற்கு மாறாக நமது தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இறுக்கமான, பொருத்தமில்லாத உள்ளாடைகளை அணிந்தால் அது பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
bras
5. பிராவின் கப் அளவு உங்கள் மார்பகங்களை முழுவதுமாக கவர் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ளவும். அதே போன்று எல்லா வித ஆடைகளுக்கும் ஒரே வகையான உள்ளாடைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வகையான உடைக்கும் இது மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.