MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் தூங்கும் முன் 'வாக்கிங்'.. யாரும் அறியாத பயனுள்ள '10' நன்மைகள்!! 

தினமும் தூங்கும் முன் 'வாக்கிங்'.. யாரும் அறியாத பயனுள்ள '10' நன்மைகள்!! 

Walking Before Sleep : தினமும் தூங்க செல்வதற்கு முன்பு வாக்கிங் செல்வதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 06 2025, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
walking benefits in tamil

walking benefits in tamil

பொதுவாக உறங்க செல்வது நம் உடலை ஓய்வாக வைத்திருக்க தான். ஆனால் ஓய்வெடுப்பதற்கு முன்பு மிதமான பயிற்சியாக ஒரு குறுநடை செல்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது ஏன் அவசியம், இதனால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய 10 வகையான நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Health Benefits of Walking Before Sleep in Tamil

Health Benefits of Walking Before Sleep in Tamil

1). ஆழ்ந்த தூக்கம்: 

தினமும் தூங்குவதற்கு முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுடைய தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலின் சர்க்காடியன் தாளத்தை அதாவது, நாம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, உறங்குவது என பழக்கிய உடலின் யூகிக்கக்கூடிய உயிரியல் சுழற்சியை சீராக்க நடைபயிற்சி உதவும். தினமும் நடப்பது மூளைக்கு தூங்குவதற்கான சிக்னலை அளிக்கும். இதனால் பதற்றம், மன அழுத்தம் ஆகியவை குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது.

2). இரத்த ஓட்டம் சீராகும்: 

 இரவில் தூங்கும் முன் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். மூட்டுகள் நன்கு இயங்கும். தூங்க செல்லும் முன் நடப்பதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடலின் அனைத்து பாகங்களிலுக்கும் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைக்கும். 

இதையும் படிங்க:  இந்த '1' விஷயம் சரியா பண்ணாம 10,000 காலடிகள் நடந்தாலும் வேஸ்ட்தான் தெரியுமா?

35
Walking before bed benefits in tamil

Walking before bed benefits in tamil

3). நீங்கும் மன அழுத்தம்!

நடைபயிற்சி மனநிலையை மேம்படுத்தும்  எண்டோர்பின்களை தூண்டும். இதனால்  மன அழுத்தத்தைக் குறைந்து நிம்மதியாக உணர்வீர்கள். உங்களுடைய கவலைகளில் இருந்து விடுபட்டு மனதைத் தெளிவுபடுத்த நடைபயிற்சி உதவியாக இருக்கும். உங்களுடைய ரத்த அழுத்தம் குறைய நடைபயிற்சி உதவுகிறது. உயரத்த அழுத்தம் இருப்பவர்கள் இரவில் உறங்குவதற்கு முன்பு நடப்பதால் அவர்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் வாய்ப்புள்ளது. இதயம் ஆரோக்கியமாக இருக்க உறங்கும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். 

4). மேம்பட்ட செரிமானம்: 

இரவு சாப்பிட்ட பின் நடந்தால்     அஜீரணம், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உணவு செரிமானம் மேம்படும். உணவானது செரிமானப் பாதை மூலம் விரைவாக கொண்டு செல்லப்படும்.  வயிற்றுக்கோளாறுகளால் அசௌகரியம் இல்லாமல்  நிம்மதியாக உறங்கலாம்.  

இதையும் படிங்க:  வாக்கிங் போறத வைச்சு உடல் 'ஆரோக்கியத்தை' கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா? 

45
walking before sleep benefits in tamil

walking before sleep benefits in tamil

5). எடை குறைக்க! 

தினம் இரவில் சாப்பிட்ட பின் நடைபயிற்சி மேற்கொள்வதால் உங்களுடைய எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.  நடைபயிற்சி கெட்ட கொழுப்பினை எரித்து எடையை குறைக்க உதவுகிறது. தினமும் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. உடலில் அதிக ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு அதிகமான ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுவதால் உடல் எடையும் குறைகிறது. நல்ல தூக்கம் வரும். 

6). தெளிவான மனம்: 

 உறங்கும் முன் வாக்கிங் செய்தால் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவுறும். நிம்மதியாகவும் அமைதியாகவும் தூங்க முடியும். அமைதியாக நடக்கும்போது உடல் அசைவில் உண்டாகும் ஒருவித தாள இயக்கம் மனதில் தியான விளைவை உண்டாக்கும். இதனால் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கண்ணாடி போல துல்லியமாக மனத்தெளிவு எண்ணங்களில் பிரதிபலிக்கும். 

 7). வலுவாகும் நோயெதிர்ப்பு மண்டலம்:  

உறங்கச் செல்லும் முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. தினமும் நடப்பது உங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று நோய்களுடைய தாக்கம் குறைவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீங்கள் தினமும் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது உங்களுடைய உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. 
 

55
Tips for walking before sleep in tamil

Tips for walking before sleep in tamil

8). அதிகமாகும் வாழ்நாள்! 

தினமும் இரவில் நடைபயிற்சி செய்வது உங்களுடைய ஆயுளை நீட்டிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி பயனளிக்கிறது. இதன் மூலம்  ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி உதவுகிறது.

9). தசைகள் தளர்வாகும்: 

பகலில் உடல் செயல்பாடுகளால் தசை விறைப்பு, தசைகளில் வலி ஆகியவை ஏற்பட்டிருந்தால் இரவில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய தசைகள் தளரும். இதனால் நீங்கள் இலகுவாக உணர்வீர்கள். தேவையில்லாத பதற்றம் நீங்குகிறது. நடைப்பயிற்சி தசைகளை தளர செய்து  உங்களை மீட்டு எடுக்கிறது. ஆழ்ந்த தூக்கம் வரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved