MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஆபத்தான நோய்களை கூட அசால்டா விரட்டும் சாம்பிராணி! இது தெரியாம போச்சே!

ஆபத்தான நோய்களை கூட அசால்டா விரட்டும் சாம்பிராணி! இது தெரியாம போச்சே!

Sambrani Health Benefits : சாம்பிராணி போடுவது வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சாம்பிராணி புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

2 Min read
Author : Ramya s
Published : Oct 18 2024, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sambrani

Sambrani

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பலரின் வீடுகளிலும் சாம்பிராணி போடும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. சாம்பிராணி போடுவதால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும் என்று ஆன்மீக ரீதியில் சொல்லப்படுகிறது.

வீட்டில் உள்ள தரித்திரம், பீடைகள் விலகி லட்சுமி கடாட்சம் கிடைப்பதுடன், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் தலைக்கு குளித்த உடன் சாம்பிராணி புகை காட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். இன்றும் பல வீடுகளில் குழந்தைகளுக்கும் தலையை காய வைக்க சாம்பிராணி புகை பயன்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sambrani

Sambrani

ஆனால் சாம்பிராணி போடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்து நிபுணர்கள் சொன்ன கருத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) என்று அழைக்கப்படுகிறது. இது போஸ்வெலியா (Boswellia ) என்ற பட்டையில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த மரங்கள் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வளர்கிறது. 

மா இலை பல நோய்களையும் ஓட ஓட விரட்டும்.. ஆனா இவுங்க மட்டும் சாப்பிடக் கூடாது!

34
Sambrani Health Benefits

Sambrani Health Benefits

இந்த மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசினி ஒளிப்புகும் தன்மையும், எளிதில் எரியக்கூடிய தன்மையும் கொண்டு சாம்பிராணியாக மாறுகிறது. இந்தியாவை பொறுத்த வரை குஜராத் அசாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, தமிழ்நாட்டில் இந்த சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன. தீக்குச்சி தயாரிப்பிலும் சாம்பிராணி மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சரி, சாம்பிராணியால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதுகுறித்து பிரபல மருத்துவரும், இரைப்பை குடல் நோய் நிபுணரும் டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “ சாம்பிராணி என்பது மிகவும் முக்கியமான விஷயம். இது 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆயுர்வேதத்தில் சாம்பிராணி பயன்படுத்துகிறது. உடலில் உள்ள வீக்கத்தையும், மூட்டு வலியையும் குறைக்ககூடிய சக்தி சாம்பிராணிக்கு இருக்கிறது. இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

44
Sambrani Health Benefits

Sambrani Health Benefits

அது மட்டுமின்றி இந்த சாம்பிராணியில்  பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும் சக்தி இருக்கிறது. சில பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகள் சாம்பிராணியில் இருக்கின்றன. மேலும் ஃப்ளூ வைரஸ் பரவுவதை சாம்பிராணி தடுக்கிறது. சாம்பிராணியில் வைரஸ் எதிர்ப்பு பண்புகளும் இருக்கிறது. நம் வீட்டில் சாம்பிராணி புகை போட்டாலே போதும், வீட்டிற்கு கிருமி நீக்கம் செய்ய வேண்டியதில்லை. சாம்பிராணியில் கிருமியை நீக்கும் பண்புகள் இயற்கையாகவே உள்ளன.

ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தவும் சாம்பிராணி புகை உதவுகிறது. மேலும் வீட்டில் சாம்பிராணி புகை போட்டாலே வைரஸ் கிருமி நம் உடலில் உள்ளே நுழைவதை தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார். 

நீங்களும் இந்த தவறை செய்யாதீங்க! பழங்களின் முழு சத்தும் கிடைக்க இப்படி சாப்பிடுங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved