- Home
- Lifestyle
- Happy Father's Day 2025 : அப்பாவை மெய்சிலிர்க்க வைக்கும் சிறந்த 'தந்தையர் தின' வாழ்த்துகள்!!
Happy Father's Day 2025 : அப்பாவை மெய்சிலிர்க்க வைக்கும் சிறந்த 'தந்தையர் தின' வாழ்த்துகள்!!
நாளை (ஜூன்.15) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உங்கள் அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய சில அழகான வாழ்த்துக்கள், செய்திகள், கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நம் ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ யாரென்றால் அப்பா தான். அப்பா எந்நேரமும் நம் மீது கோபம், கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், நமக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு கடுமையாக உழைக்கும் ஒரு ஜீவனும் அவரே. ஆகவே, தந்தையர்களின் எண்ணற்ற தியாகங்களை நினைத்து கொண்டாடும் நோக்கமாக உலம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை தான் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் நாளை வருகிறது. அந்நாளில் நம்முடைய வாழ்க்கையின் வழிகாட்டியான அப்பாவை மெய்சிலிர்க்க வைக்கும் சில தந்தையர் தின வாழ்த்துக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. தந்தை வெறும் அழைப்பதற்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கு வழிகாட்டியும் அவரை. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!!
2. "அப்பா, இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! உங்களுடைய அன்புக்கும், வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி".
3. "அப்பா, நீங்கள் தான் என் முதல் ஹீரோ! என் வழிகாட்டி, என் ஆதரவாளர். உங்களுக்கு என் இதயபூர்வமான தந்தையர் தின வாழ்த்துக்கள்!"
4. "அப்பா, நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள் நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்!" ஹாப்பி ஃபாதர்ஸ் டே டாடி
5. "அப்பா, உங்க அன்பு தான் இந்த உலகில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு". தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!!
6. "உங்களுடைய ஞானமும், அன்பும் என்னை ஒவ்வொரு நாளும் வழி நடத்துகின்றது". இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!!
7. " அப்பா, நீங்கள் எனக்கு ரோல் மாடல்". ஹாப்பி ஃபாதர்ஸ் டே டாடி!!
8. " அப்பா உங்க அன்பு தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்". இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!!
9. "எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு, அதுவும் கடவுளிடமிருந்து வந்தது. அவரை தான் நான் அப்பா என்று அழைக்கிறேன். தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!!"
10. "அப்பா, உமங்கள யாராலும் ஈடு செய்ய முடியாது. ரொம்ப ரொம்ப லவ் யூ டாடி!"