Father's Day 2025 : அப்பாவுக்கு பரிசை விட இதுதான் தேவை!! மறக்காம பண்ணுங்க
தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிள்ளைகளை உயர்ந்த இடத்தில் வைப்பதற்காக தன்னையே வறுத்திக் கொண்டு அயராது உழைக்கும் தந்தையை போற்றுவதே இந்நாளின் நோக்கம்.

Father's Day 2025
ஒவ்வொரு தந்தையும் தனது மகள்/மகன் நன்றாக படிக்க வைத்து உயர்ந்த இடத்தில் பணி அமர்த்தி பெரிய ஆளாக்கி அழகு பார்ப்பார்கள். ஆனால், அம்மாவிடம் இருக்கும் சுதந்திரம், உரிமை அப்பாவிடம் இருக்காது. ஏனென்றால் அப்பா நல்லவராக இருந்தாலும் அவரிடம் இருக்கும் அதிக கோபம், கண்டிப்பு இப்படி பல காரணங்கள் உள்ளன. உண்மையில் கருவில் சுமந்தது அம்மாவாக இருந்தாலும், தோளில் சுமப்பது அப்பா தான்.
அப்பாவின் அன்பு..
அப்பா நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு திசைகாட்டி போன்றவர் ஆவார். நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு பாதுகாப்பு அளிப்பவர் அப்பா தான். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நம்முடைய தேவைகளை மட்டுமே சிந்திப்பவர் தான் அப்பா. ஆனால் அவருடைய அன்பை பலரும் புரிவதில்லை. அப்பாவின் உழைப்பை அங்கீகரிப்பதில்லை. உலக அளவில் அன்னையர் தினம், மகளிர் தினம் போலவே தந்தையர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. பிள்ளைகளுக்காக எண்ணிலடங்கா தியாகங்களை செய்த தந்தையை போற்றிக் கொண்டாடுவதே இந்நாளின் நோக்கம். ஆகவே உங்கள் அப்பாவின் அன்பை உணர்ந்து அவர்களுக்காக இந்த தந்தையர் தந்தையர் தினத்தன்று சில காரியங்களை செய்யுங்கள். அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
அப்பா மீது இருக்கும் அன்பை இப்படி சொல்!
அப்பா மீது நீங்கள் அன்பாக இருந்தாலும் வாட்ஸ் அப் பேஸ்புக் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்துவதற்கு பதிலாக உங்கள் கைகளால் உங்கள் அப்பா மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்த கடிதத்தை எழுதுங்கள். அதில் உங்கள் அப்பாவிடம் சொல்ல நினைத்ததை எழுதுங்கள். அதாவது தந்தையிடம் சொல்ல முடியாத விஷயங்கள், அவர் மீது பெருமைப்படும் விஷயங்கள், அவருடன் செலவிட்ட தருணங்கள் இதுபோன்று எழுதி கொடுக்கும். இந்த கடிதம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும்.
பரிசுகள் கொடுக்கலாம்:
தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தைக்கு விலை உயர்ந்த பரிசு தான் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் அப்பாவின் தேவைக்கேற்ப டைரி, புத்தகம், பேனா இது போன்ற எளிமையான பரிசையும் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பரிசு அவரை மகிழ்ச்சியாக்கும். மேலும் நீங்கள் உங்கள் அப்பாவை கவனிக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.
பழைய நினைவுகளை மீட்டெடு!
தந்தையர் தினத்தன்று நீங்கள் உங்கள் அப்பாவுடன் அமர்ந்து பழைய ஆல்பத்தை பார்த்து பழைய நினைவுகளை குறித்து பேசி மகிழுங்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையேயான பிணைப்பு மேலும் வலுப்படும். இவை உங்களுக்கிடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.
ஒன்றாக நேரத்தை செலவிடு!
தந்தையர் தினத்தன்று உங்கள் அப்பா உடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உதாரணமாக கிரிக்கெட் பார்ப்பது, ஒன்றாக வாக்கிங் செல்வது, ஒன்றாக டீ காபி குடிப்பது அல்லது சுற்றுலா செல்வது இது போன்ற பல விஷயங்களை செய்யலாம்.
அப்பாவின் வேலையை நீங்கள் செய்யலாம்:
உங்கள் அப்பா தினமும் செய்யும் வேலைகளில் இருந்து அவருக்கு தந்தையர் தினத்தன்றாவது ஓய்வு கொடுங்கள். அந்நாளில் உங்க அப்பாவிற்கு பதிலாக நீங்கள் அவர் செய்யும் வேலைகளை செய்யுங்கள். இது சிறிய விஷயமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இப்படி நீங்கள் செய்தால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக உணர்வார்.
நினைவில் கொள் :
தந்தையர் தினம் என்பது அப்பாவுக்காக ஸ்டேட்டஸ் போடுவது, விலை உயர்ந்த பரிசுகளை கொடுப்பது மட்டுமல்ல. அன்பை வெளிப்படுத்தும் நாள் அது. எனவே அந்நாளில் உங்களது தந்தையை சிறப்பாக உணர வையுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயல், வார்த்தை அவரது இதயத்தை தொடட்டும்.