Father's day special songs: தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்காக இந்த பாடல்களை ஸ்டேட்டஸ் வைங்க!!
தந்தையர் தினத்தில் எந்தெந்த பாடல்களில் ரீல்ஸ் செய்யலாம், எந்த பாடலை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தந்தை பாசம் கிடைப்பது வரம் என்று தான் சொல்லவேண்டும். தான் வசதியாக வாழாவிட்டாலும் தன் பிள்ளைகள் 'ராஜா/ ராணி' போல வாழ வேண்டும் என்று ஆசைப்படும் தன்னலமில்லா ஜீவன்கள் தான் தந்தைகள். தந்தை பாசத்திற்கு ஏங்குபவர்களிடம் கேட்டால் புரியும் 'தந்தை' என்ற உறவு எத்தனை மகத்துவமானது. ஆனால் எல்லோருக்கும் மகத்துவமான அப்பா கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் பெருஞ்சோகம். பொறுப்பில்லாத அப்பாக்களால் நிலைகுலைந்த குடும்பங்கள் ஏராளம்.
தந்தையர் தினம் 2023:
மகத்துவமான அப்பாக்களை கொண்டாடும் நாளாக தான் தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிள்ளைகளின் வளர்ப்பில் சமமாக பொறுப்பெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாக வாழும் அப்பாக்களை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ஆம் தேதி தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், பிள்ளைகள் அப்பாக்களுக்கு பரிசுகள் வழங்கியும், வாழ்த்துகள் சொல்லியும் மகிழ்வார்கள். அன்றைய தினம் அப்பாவுக்கு டெடிகேட் செய்யும் வகையிலான பாடல்களை இங்கு காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அதை ரீல்ஸாக செய்து போட்டால் லைக்குகளை அள்ளலாம்.
அப்பா - மகள் பாடல்கள்:
தமிழ் சினிமாவில் அப்பா மகளுக்கு இருக்கும் உறவை பல படங்கள் காட்டியுள்ளன. ஆனால் சில படங்களில் உள்ள பாடல்கள் தான் நம் மனதில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனதை உருக்கும் அப்பா மகள் பாடல்கள் பின்வருமாறு:
- எந்தன் வாழ்க்கையின் அர்த்தம்... படம் : சின்ன கண்ணம்மா
- வா வா என் தேவதையே...படம்: அபியும் நானும்
- ஆனந்த யாழை மீட்டுகிறாய்... படம்: தங்கமீன்கள்
- ஆரீரோ ஆராரீரோ... படம்: தெய்வத்திருமகள்
- உனக்கென்ன வேண்டும் சொல்லு..படம்: என்னை அறிந்தால்
- வாயாடி பெத்த புள்ள..படம்: கனா
- மவளே மவளே...படம் தீர்ப்புகள் விற்கப்படும்
- அடி பெண்ணே ஒருமுறை..படம்: 'நாம்' சீரிஸ்
அப்பா - மகன் பாடல்கள்:
- குறும்பா...படம்: டிக் டிக் டிக்
- அன்புள்ள அப்பா அப்பா..படம்: சிகரம் தொடு
- தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
- ஓரே ஒரு ஊருக்குள்ளே.. படம்: தவமாய் தவமிருந்து
- அப்பன் மவனே வாடா..படம்: போடா போடி
- தாயாக நான்..படம்: டாடா
தந்தை பாசம் என்பது வெறும் பாடல்களுக்குள் அடங்கும் உணர்வு அல்ல. அதை தாண்டியும் புனிதமானது. இந்த பாடல்களுக்கு உங்கள் தந்தையுடன் ரீல்ஸ் செய்வதை விடவும் முக்கியமானது, அவர்களிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வது. அவருடைய அன்புக்கு தலை வணங்குங்கள். முன்கூட்டிய தந்தையர் தினம் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: Father's day 2023: தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்கு இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க!!