MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge: ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் உணவுகள்.! நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.!

Fridge: ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் உணவுகள்.! நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.!

ஃபிரிட்ஜில் உணவுகளை நீண்ட நாட்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்தை அழித்து, நஞ்சாக மாற்றிவிடும். எனவே, கால அளவை அறிந்து ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 03 2026, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய சமாசசாரம்.!
Image Credit : gemini

கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய சமாசசாரம்.!

இன்றைய அவசர உலகத்துல 'ஃபிரிட்ஜ்' இல்லாத வீடே இல்லைனு சொல்லலாம். மிச்சமான சாப்பாடு, காய்கறிகள், பால், பழங்கள்னு எதை எடுத்தாலும் "ஃபிரிட்ஜில் வை, அப்புறம் பாத்துக்கலாம்" என்ற மனநிலை நமக்கு வந்துடுச்சு. ஆனா, ஃபிரிட்ஜ்ங்கிறது உணவை எத்தனை நாட்கள் வேணாலும் கெடாம வச்சிருக்கப் போற மந்திரப் பெட்டி இல்லைங்க.!

நம்மள பல பேரு "ஃபிரிட்ஜில் தானே இருக்கு, எதுவும் ஆகாது"னு வாரக்கணக்குல உணவை வச்சு சாப்பிடுறோம். ஆனா, குறிப்பிட்ட நாட்களைத் தாண்டினா அந்த உணவுகள்ல பாக்டீரியா, பூஞ்சை காளான்கள் (Fungus) மற்றும் நச்சுப் பொருட்கள் உருவாகி, அதுவே ஒரு 'ஸ்லோ பாய்சனா' மாறிடும். இதைத்தான் 'ஃபுட் பாய்ஸனிங்' (Food Poisoning) அல்லது உணவு நச்சாக்கம்னு சொல்றாங்க. நாள் கணக்கை மறந்து ஃபிரிட்ஜ் உணவை சாப்பிட்டா, உயிருக்கே ஆபத்தாகிடும். எந்தெந்த உணவை எத்தனை நாள் தான் வைக்கணும்? எப்போ தூக்கி வீசணும்? இதோ ஒரு ஷாக்கிங் லிஸ்ட்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சமைத்த உணவுகள்: டேஞ்சர் ஜோன் எப்போது?
Image Credit : gemini

சமைத்த உணவுகள்: டேஞ்சர் ஜோன் எப்போது?

சமைத்த சாதம் (1 நாள் மட்டுமே): "நேத்து வச்ச சாதம் தானே, இன்னைக்கு சூடு பண்ணி சாப்பிடலாம்"னு நினைக்காதீங்க. சமைத்த சாதத்துல 'Bacillus cereus அப்படிங்கிற பாக்டீரியா ரொம்ப வேகமா வளரும். இதை நீங்க மறுபடி சூடு பண்ணினாலும் அந்த விஷத்தன்மை அழியாது. சாப்பிட்டா வாந்தி, வயிற்றுப்போக்கு கன்பார்ம்.!

சிக்கன், மட்டன், மீன் குழம்பு (3 – 4 நாட்கள்): அசைவ உணவுகளை 3 நாட்களுக்கு மேல ஃபிரிட்ஜில் வச்சா, அதுல 'சால்மோனெல்லா', 'ஈ-கோலை' போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் பெருகிடும். அப்புறம் பயங்கரமான ஃபுட் பாய்ஸனிங் ஆகிடும்.

சாம்பார், ரசம், காரக்குழம்பு (2 – 3 நாட்கள்): தினமும் கொதிக்க வச்சு எடுத்தா கூட 3 நாட்களுக்கு மேல இதை ஃபிரிட்ஜில் வச்சு சாப்பிடவே கூடாது.

காய்கறி பொரியல், கூட்டு (2 நாட்கள்): ஈரப்பதம் அதிகமுள்ள பொரியல் வகைகள்ல சீக்கிரமே பூஞ்சை (Fungus) பிடிச்சுடும்.

38
பால் மற்றும் பால் பொருட்கள்: உஷார்.!
Image Credit : AI Image

பால் மற்றும் பால் பொருட்கள்: உஷார்.!

  • பால் (திறந்த பாக்கெட் / பாத்திரம்): 2 முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்திடணும். அதுக்கு மேல போனா புளிப்பு வாசனையும், தயிர் மாதிரி உறையவும் ஆரம்பிக்கும். இது வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கும்.
  • தயிர்: கடையில் வாங்கிய தயிர்னா 5-7 நாட்கள் தாங்கும். அதுவே வீட்டில் தோய்த்த தயிர்னா 3-4 நாட்களுக்குள் காலி பண்ணிடுங்க.
  • பன்னீர் / சீஸ் (Open செய்த பின்): 5-7 நாட்கள் மட்டுமே. பன்னீரின் மேல்பகுதி வழுவழுப்பாகவோ அல்லது நிறம் மாறியோ இருந்தா உடனே குப்பையில போடுங்க.
  • வெண்ணெய் & நெய்: வெண்ணெயை 1 மாதம் வரை வைக்கலாம். நெய்க்கு ஃபிரிட்ஜே தேவையில்லை, வெளியவே பல மாதங்கள் இருக்கும். ஆனா வாசனை மாறினா தவிர்த்துடுங்க.
48
முட்டை: ஒரு மாதக் கணக்கு.!
Image Credit : Asianet News

முட்டை: ஒரு மாதக் கணக்கு.!

முட்டையை ஃபிரிட்ஜில் 3 முதல் 4 வாரங்கள் வரை தாராளமாக வைக்கலாம். ஆனா, ஒருமுறை முட்டையை உடைச்சு கிண்ணத்துல வச்சுட்டீங்கன்னா, அதை 1 அல்லது 2 நாட்களுக்குள்ள பயன்படுத்திடணும். பழைய முட்டைகள்ல 'சால்மோனெல்லா' தொற்று ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.

58
காய்கறிகள் மற்றும் பழங்கள்: பச்சையா இருந்தாலும் பாய்சன் ஆகும்.!
Image Credit : AI image

காய்கறிகள் மற்றும் பழங்கள்: பச்சையா இருந்தாலும் பாய்சன் ஆகும்.!

  • கீரை மற்றும் இலைக் காய்கறிகள் (2 – 3 நாட்கள்): கீரைகளை ரொம்ப நாள் வச்சா அது வாடிப் போறது மட்டுமில்லாம, அதுல 'நைட்ரேட்' அளவு ஆபத்தான முறையில அதிகரிக்கும். இது குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்பவே விஷம்.!
  • நறுக்கிய காய்கறிகள் (1 – 2 நாட்கள்): காய்கறிகளை வெட்டி வச்ச உடனே அதுல ஆக்சிஜனேற்றம் (Oxidation) ஆரம்பிச்சுடும். சத்துக்கள் அழியுறது மட்டுமில்லாம, பாக்டீரியாவும் குடியேறிடும்.
  • வெட்டிய பழங்கள் (1 நாள் மட்டுமே): தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்களை வெட்டி ஃபிரிட்ஜில் வச்சா, 24 மணி நேரத்துக்குள்ள சாப்பிட்டுடனும். இல்லைன்னா அது பாக்டீரியாக்களின் கூடாரமாக மாறிடும்.
  • முழு காய்கறிகள்: உருளைக்கிழங்கு, வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. மற்ற காய்கறிகளை 5-7 நாட்கள் வரை வைக்கலாம்.
68
நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.! என்னென்ன நோய்கள் வரும்?
Image Credit : chatgpt

நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.! என்னென்ன நோய்கள் வரும்?

 "பார்க்க நல்லாதான் இருக்கு, வாசனையும் வரலை"னு பழைய உணவை சாப்பிட்டா, உடம்புக்குள் நடக்கும் விபரீதங்கள் இதோ.

  • ஃபுட் பாய்ஸனிங்: கடுமையான வயிற்று வலி, நிற்காத வாந்தி, வயிற்றுப்போக்கு.
  • டைபாய்டு & காய்ச்சல்: 'சால்மோனெல்லா' பாக்டீரியாவால் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்படும்.
  • கர்ப்பிணிகளுக்கு ஆபத்து: 'லிஸ்டீரியா' (Listeria) என்கிற பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அளவுக்கு ஆபத்து உண்டு.
  • சிறுநீரக பாதிப்பு: 'ஈ-கோலை' (E.coli) பாக்டீரியா நச்சு முற்றிப்போனால் சிறுநீரகமே செயலிழக்க வாய்ப்புள்ளது.
  • புற்றுநோய் அபாயம்: பூஞ்சை பிடித்த உணவுகளில் 'மைக்கோடாக்ஸின்' (Mycotoxin) என்ற விஷம் உருவாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட காலத்தில் புற்றுநோய் வரலாம்.
  • முக்கிய குறிப்பு: ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவில் பெருகும்போது பல நேரங்களில் வாசனை, நிறம், சுவை எதுவுமே மாறாது. அதனால், "நல்லாத்தானே இருக்கு"னு வாசனை பார்த்து ஏமாந்துடாதீங்க.!
78
ஃபிரிட்ஜை 'ஹெல்தி'யாக கையாள சில டிப்ஸ்: தேதி குறியுங்கள்
Image Credit : chatgpt

ஃபிரிட்ஜை 'ஹெல்தி'யாக கையாள சில டிப்ஸ்: தேதி குறியுங்கள்

  •  ஃபிரிட்ஜில் வைக்கும் டப்பாக்களின் மேல் எந்த தேதி வச்சீங்கன்னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி வைங்க. நாள் கணக்கு மறக்காது.
  • சூடாக வைக்காதீங்க: சமைத்த உணவை அப்படியே சூடோடு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. நன்றாக ஆறிய பிறகே வைக்க வேண்டும்.
  • டெம்பரேச்சர் செக்: ஃபிரிட்ஜின் வெப்பநிலை எப்போதும் 4°C அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும்.
  • மூடி வைங்க: எல்லா உணவுகளையும் தனித்தனி காற்றுப்புகாத (Air-tight) டப்பாக்கள்ல மூடி வைங்க.
  • சந்தேகமா இருந்தா தூக்கிப் போடுங்க: "இந்த சாப்பாடு நல்லா இருக்குமா, கெட்டுப்போயிருக்குமா?"னு லேசான சந்தேகம் வந்தா கூட, யோசிக்காம குப்பையில போடுங்க (When in doubt, throw it out). ஆரோக்கியத்தை விட உணவு முக்கியமில்லை.!
88
ஃபிரிட்ஜ் நமக்கு வரம் தான், ஆனா...!
Image Credit : chat gpt

ஃபிரிட்ஜ் நமக்கு வரம் தான், ஆனா...!

ஃபிரிட்ஜ் நமக்கு வரம் தான், ஆனா அதை நாம முறையா பயன்படுத்தலைனா அதுவே நமக்கான எமனாக மாறிடும். "ஃபிரிட்ஜில் இருக்கிறதே" என்ற அலட்சியத்தை தூக்கிப் போட்டுட்டு, எந்த உணவை எத்தனை நாள் வைக்கணும்ங்கிற விழிப்புணர்வோடு செயல்படுவோம். ஆரோக்கியமான உணவை உண்போம், ஆபத்துகளைத் தவிர்ப்போம்.!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்
உணவு சேர்க்கைகள்
உணவு
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?
Recommended image2
Food : மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 10 உணவுகள்.! இதெல்லாம் விஷமாக மாறுமாம்.! புற்றுநோய் ஆபத்து வரும்.! எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved