பிரியாணி சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க; டேஞ்சர்!! டேஞ்சர்!!
பிரியாணி சாப்பிட்ட பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Foods To Avoid After Eating Biryani
பிரியாணி என்ற வார்த்தையை கேட்டாலே பலரது நாவிலும் எச்சில் ஊறும். பிரியாணி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பிரியாணி தான். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீஃப் பிரியாணி, ஃபிஷ், பிரியாணி, இறால் பிரியாணி என பிரியாணியில் பல வகைகள் உள்ளன. பிரியாணியை தினமும் சாப்பிடுபவர்கள், வார இறுதியில் சாப்பிடுபவர்கள் பலரும் உண்டு. பிரியாணி சாப்பிட்ட பிறகு சில உணவுகள் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கூல் ட்ரிங்க்ஸ்
பிரியாணி சாப்பிட்ட பிறகு பலர் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பார்கள் ஆனால் அப்படி குடிப்பது தவறு. ஏனெனில் பிரியாணி சூடான உணவு, கூல் ட்ரிங்க்ஸ் குளிர்ச்சியானது. இவை இரண்டும் ஒன்று சேரும்போது உடலின் வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இதன் விளைவாக உடலில் பல பிரச்சனைகள் வரும். உதாரணமாக அஜீரணம், வாயு, வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இதில் அடங்கும்.
இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்
சில பிரியாணி சாப்பிட்ட உடனே ஏதாவது ஒரு இனிப்பு அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மோசமாக பாதிக்கப்படும். மேலும் பிரியாணியில் இருக்கும் கொழுப்பு பொருட்கள் உடலில் கொழுப்பாக மாறிவிடும். இந்த சமயத்தில் சர்க்கரை அதிகமாக உள்ள ஸ்வீட்ஸ் ஏதேனும் சாப்பிட்டால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும் மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்
பழங்கள்
பிரியாணி சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை சிலர் பழக்கமாக வைத்துள்ளனர் அல்லது பழசாறு குடிக்க விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் பிரியாணி மசாலா பொருட்கள் நிறைந்த உணவு என்பதால் பழங்கள் இருக்கும் நார்ச்சத்து மற்றும் அமில பண்புகளுடன் இணைந்து, செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக இரைப்பை பிரச்சனை மற்றும் அமிலத்தன்மை ஏற்படும்.
மில்க் ஷேக்குகள்
பிரியாணி சாப்பிட்ட உடனே மில்க் ஷேக்குகள் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பிரியாணியில் இருக்கும் புரதங்கள் பாலுடன் கலக்கும் போது உடலில் செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் உணவு விஷமாக மாறும் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
டீ, காபி
பலருக்கு பிரியாணி சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும் இருப்பினும் இந்த பழக்கத்தை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காஃபின் பிரியாணியில் இருக்கும் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைக்கும். மேலும் செரிமான அமைப்பில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
குறிப்பு : பிரியாணி சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணி நேரம் எந்த ஒரு உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. இல்லையெனில், உடல் நலம் தான் பாதிக்கப்படும். வேண்டுமானால் கொஞ்சமாக சூடான நீர் குடிக்கலாம்.