லிப்ட் பயன்படுத்தும் போது இந்த 5 விஷயங்களை கவனிச்சிருக்கீங்களா? இல்லனா ஆபத்து தான்!
லிப்ட் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆபீஸ், மால், அப்பார்ட்மெண்ட் என எங்கு பார்த்தாலும் லிப்டை பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் நாம் செய்யும் சில சின்ன சின்ன தவறுகள் பெரிய ஆபத்தையோ அல்லது தர்மசங்கடமான சூழ்நிலையையோ ஏற்படுத்தலாம்.

கதவு திறந்ததும் உடனே காலை வைக்காதீங்க:
லிப்ட் கதவு திறந்ததும் மொபைலைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைவது ஆபத்தானது. சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறால் லிப்ட் பாக்ஸ் வராமல் கதவு மட்டும் திறக்கலாம் அல்லது தரை மட்டத்தை விட கொஞ்சம் இறங்கி நிற்கலாம். எனவே, ஒரு நொடி தரை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அடியெடுத்து வையுங்கள்.
கையை நீட்டி கதவை நிறுத்தாதீங்க
யாராவது ஓடி வரும் போது கதவு மூடினால், நாம் கையை அல்லது காலை நடுவில் நீட்டி கதவை நிறுத்த முயல்வோம். நவீன லிப்ட்டுகளில் சென்சார்கள் இருந்தாலும், சில பழைய லிப்டுகளில் சென்சார் வேலை செய்யாமல் கையை நசுக்கிவிடலாம். அதற்குப் பதிலாக, லிப்டுக்குள் இருக்கும் 'Door Open' (<|>) பட்டனை அழுத்துங்கள்.
கூட்ட நெரிசலில் எப்படி நிற்பது:
லிப்டுக்குள் இரண்டு பேர் இருந்தால் எதிர் எதிர் மூலைகளில் நிற்க வேண்டும். 4 பேர் இருந்தால் நான்கு மூலைகளில் நிற்க வேண்டும். 5 பேருக்கு மேல் இருந்தால் எல்லாரும் கதவை நோக்கி மட்டுமே முகத்தை வைத்து நிற்க வேண்டும். ஒருவரின் முகத்தை மற்றொருவர் நேருக்கு நேர் பார்ப்பது மற்றவர்களை அசிங்கமாகவும், அசௌகரியமாகவும் உணர வைக்கும்.
லிப்டுக்குள் போன் பேசுவதை தவிர்க்கவும்:
மூடிய இரும்புப் பெட்டி என்பதால் லிப்டுக்குள் கதிர்வீச்சு (Radiation) அதிகமாக இருக்கும். சிக்னலும் சரியாக கிடைக்காது. இந்த நேரத்தில் போன் பேசினால் மொபைல் அதிக பேட்டரியை உறிஞ்சும், கதிர்வீச்சும் அதிகமாகும். மேலும், உங்கள் தனிப்பட்ட கதைகளை மற்றவர்கள் கேட்பதும் நாகரிகமல்ல.
கரண்ட் போனால் பயப்பட வேண்டாம்:
லிப்ட் நடுவில் நின்றால் உடனே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்று பயப்பட வேண்டாம். லிப்டில் காற்று வர போதுமான துவாரங்கள் இருக்கும். கதவை பலவந்தமாகத் திறக்க முயலாமல், 'Alarm' பட்டனை அழுத்தவும் அல்லது மொபைல் டார்ச் அடித்து அங்கிருக்கும் அவசர உதவி எண்ணை அழைக்கவும். அமைதியாக இருப்பதே உங்களை சீக்கிரம் காப்பாற்றும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

