Tooth Pain : தீராத பல் வலியா? ஒரே மருந்துதான்.. இதை செஞ்சா உடனே வலி போகும்
பல் வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்க உதவும் சில சூப்பரான வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tooth Pain Home Remedies
எந்த வலி வந்தாலும் கூட தாங்கி விடலாம். ஆனால் பல் வலியை மட்டும் தாங்கி கொள்ளவே முடியாது. அதனால்தான் பல் சொத்தை ஆகாமல், பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பல் வலி வந்தால் பற்களை சுற்றி மற்றும் தாடைகளில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். அந்த வலியை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவிப்பவர்களுக்கு தான் அதன் வலி புரியும். இப்படி நீங்களும் பல் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து பாருங்கள். உடனே பல் வலி இருந்து நிவாரணம் பெறுவீர்கள். அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய் பல் வலி மற்றும் சொத்தையை போக்குவதற்கு பெஸ்ட் சாய்ஸ். இந்த எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன. இதற்கு ஒரு பருத்தி உருண்டையில் இந்த எண்ணெயின் 2-3 சொட்டுகளை ஊற்றி அதை பாதிக்கப்பட்ட பல்லில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்த சூடான நீரில் வாயை கொப்பளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் வலியும் குறையும். பல்லில் இருக்கும் புழுவும் சேர்த்து மடியும்.
மஞ்சள் மற்றும் உப்பு
பல் வலியை குறைக்கவும், பற்களை சுத்தம் செய்து தொற்று நோயை தடுக்கவும் இவை இரண்டும் உதவுகின்றன. இதற்கு 1 ஸ்பூன் மஞ்சளுடன் சிறிதளவு உப்பு கலந்து அதை பாதிக்கப்பட்ட பல்லில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.
வேப்பிலை
பழங்காலத்திலிருந்தே பற்களை வலுப்படுத்த வேம்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் போலாக்கி அதை பாதிக்கப்பட்ட பல்லி தடைவி வந்தால் பல் சொத்தை குறையும், பற்களும் வலுவாக மாறும். இது தவிர வேப்ப குச்சியை கொண்டும் தினமும் பல் துலக்கலாம்.
பூண்டு
பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற பொருள் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டுள்ளன. எனவே பல் வலி ஏற்படும் போது 2-3 பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதை பாதிக்கப்பட்ட பல்லில் வைக்கவும். இதனால் பல்வலி சீக்கிரமாக குறைந்து விடும்.
உப்பு நீர்
ஒரு கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு கல் உப்பை சேர்த்து அந்த நீரால் வாயை கொப்பளித்து வந்தால் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள், குப்பைகள் வெளியேறிவிடும். இதனால் பல் வலி மட்டுமல்ல வீக்கம், தொண்டை புண் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதுதவிர, பல் வலி இருக்கும்போது வலி உள்ள இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படும். இதனால் அந்த பகுதியில் வலி, வீக்கம் குறையும்.
பல் வலி வருவதை தடுப்பதற்கான சிறந்த வழிகள் :
- ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
- இனிப்பு நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- எந்தவொரு உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
- அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பல் மருத்துவரை சந்தித்து பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- மூன்று நாட்களுக்கு மேல் பல் வலி நீடித்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.