MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • புளித்த ஏப்பம்? 10 நிமிடத்தில் சரியாக சூப்பரான டிப்ஸ்!

புளித்த ஏப்பம்? 10 நிமிடத்தில் சரியாக சூப்பரான டிப்ஸ்!

Sour Burps Home Remedies : நீங்கள் அடிக்கடி புளித்த ஏப்பத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்காக சில வீட்டு வைத்தியம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 23 2025, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sour Burps Home Remedies In Tamil

Sour Burps Home Remedies In Tamil

உணவு சாப்பிட்ட பிறகு ஏப்பம் வருவது மிகவும் பொதுவானது. ஆனால் சில சமயங்களில் இந்த ஏப்பம் அழுகிய முட்டை போன்ற துர்நாற்றம் வீசு அளவுக்கு இருந்தால், அது சங்கடத்தை ஏற்படுத்தும். இது புளித்த ஏப்பம் என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இதனால் மார்பு மற்றும் தொண்டையில் எரியும் உணர்வை ஏற்படும். புளித்த ஏப்பம் துர்நாற்றமாக வருவதற்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. மேலும் இவை இரண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களுடன் வினைபுரிந்து துர்நாற்றமாக ஏப்பத்தை வெளியேற்றுகிறது. இதை தவிர பிற காரணங்களும் உள்ளன.

25
Sour Burps Home Remedies In Tamil

Sour Burps Home Remedies In Tamil

புளித்த ஏப்பம் வருவதற்கு காரணங்கள்:

- இரவு தாமதமாக சாப்பிடுவது, அதிகமான உணவை சாப்பிடுவது, விரைவாக சாப்பிடுவது, உடல் பருமனாக இருப்பது, முக்கியமாக சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்வது.

- வெங்காயம், பூண்டு, தக்காளி, புதினா, சாக்லேட், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால்.

- காபி, டீ அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதால்.

- சிகரெட் மற்றும் ஆல்கஹால்

- அதிகப்படியான எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது

இதையும் படிங்க:  மவுத்வாஷ் யூஸ் பண்றீங்ளா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி பயன்படுத்த மாட்டீங்க!!

35
Sour Burps Home Remedies In Tamil

Sour Burps Home Remedies In Tamil

புளித்த ஏப்பத்திற்கான அறிகுறிகள்:

- அடிவயிற்றில் ஏற்படும் எரிச்சலானது உணவுக்குழாய், கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதி வரை பரவி வலியை ஏற்படுத்தும்.

- அதன் பிறகு வாயில் கசப்பான அல்லது புளிப்பான சுவையை ஏற்படுத்தும்.

- சாப்பிட்ட உணவு அல்லது குடித்த திரவங்கள் மீண்டும் வயிற்றிலிருந்து வாய்க்கு வரும்.

- பல நாள் இருக்கும் இருமல்

- வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும்.

இதையும் படிங்க: வாயில் உள்ள கெட்ட நாற்றத்தை போக்க காலையில் செய்ய வேண்டிய 5 படிநிலைகள்.. நிபுணர்களே சொன்னது!

45
Sour Burps Home Remedies In Tamil

Sour Burps Home Remedies In Tamil

புளித்த ஏப்பத்தை சரி செய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்:

1. உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை நன்றாக மென்று சாப்பிடுங்கள் இதனால் செரிமானம் தூண்டப்பட்டு எந்தவித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

2. ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படாது.

3. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து குடித்தால் அசிடிட்டி பிரச்சனை வராது.

55
Sour Burps Home Remedies In Tamil

Sour Burps Home Remedies In Tamil

4. சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வாயு பிரச்சனை இருந்தால் புதினா டீ குடியுங்கள் இது நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை குறைக்கும். மேலும் குளித்து ஏப்பம் மற்றும் வாயிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

5.  சாப்பிட்ட உடனே புளித்த ஏப்பம் வந்தால் சீரக தண்ணீர் குடியுங்கள். 
சீரகம் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால் ஒரு ஸ்பூன் சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடியுங்கள். இதனால் செரிமான அமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி வாயு அமலத்தன்மை மற்றும் புளித்த இயக்கத்திலிருந்து உங்களுக்கு நிவாரணம் கொடுக்கும்.

6. இஞ்சி வயிற்றுக்கு ரொம்பவே நல்லது. புளித்து ஏற்ற பிரச்சனை இருந்தால் இஞ்சியை  நன்றாக மென்று சாப்பிடுங்கள். இஞ்சியில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவும். இஞ்சி சாறு குடித்தால் அமிலத்தன்மை, வாயு, புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved