MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மவுத்வாஷ் யூஸ் பண்றீங்ளா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி பயன்படுத்த மாட்டீங்க!!

மவுத்வாஷ் யூஸ் பண்றீங்ளா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி பயன்படுத்த மாட்டீங்க!!

Mouthwash Side Effects : மவுத்வாஷ் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் சில பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 07 2025, 04:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mouthwash side effects in tamil

Mouthwash side effects in tamil

வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைய நவீன உலகில் பலர் வெண்மையான பற்கள், புத்துணர்ச்சியான சுவாசத்திற்கு மவுத்வாஷ் பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் மவுத்வாஷ் அவர்களது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி சொல்லப்போகிறோம். 

25
Risks of using mouthwash in tamil

Risks of using mouthwash in tamil

அதாவது சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுவதாக சொல்லுகின்றன. ஆம், இதுவரை பெரும்பாலானோர் மவுத் வாஷிங் நன்மைகளைப் பற்றி தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே,  தொடர்ந்து மவுத்வர்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  உங்கள் பற்கள் வெண்மையாக மாறனுமா? அப்போ கண்டிப்பா இந்த பழங்களை சாப்பிடுங்க..!!

35
Oral health and mouthwash in tamil

Oral health and mouthwash in tamil

வாயை உலரச் செய்யும்:

மவுத்வாஷ் வாயில் துர்நாற்றத்தை நீக்கவும், பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும் பெரிதும் உதவுகிறது. ஆனால் அதை அத்தொடர்ந்து பயன்படுத்தினால் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? ஏனெனில் பெரும்பாலான மவுத்வாஷ்களில் அல்கஹால் தான் இருக்கிறது. இது வாயில் வறட்சியை ஏற்படுத்தும்.

வாயில் எரிச்சல், வலி ஏற்படுத்தும்:

ஆல்கஹால் கொண்ட மவுத்வாஷை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது வாயில் எரிச்சல், மற்றும் வலி ஏற்படும். இந்த பிரச்சனையை நீங்கள் உடனே சரி செய்யவில்லை என்றால் மோசமாக வாய்ப்பு உள்ளது.

45
Mouthwash ingredients in tamil

Mouthwash ingredients in tamil

பற்களில் கறை படியும்:

மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்களில் கறை படியும். ஏனெனில் இருக்கும் சில பொருட்கள் படிப்படியாக அவற்றின் விளைவை பற்களில் தான் காட்டுகின்றன. இதனால்தான் பற்களில் கறை காணப்படுகிறது.

புற்று நோய் வரலாம்:

2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு வாய், கழுத்து, தலைப்பகுதியில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளன. எனவே நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்த விரும்பினால் அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  பல் தேய்க்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடித்தால் நினைத்து பார்க்க முடியாத  பலன்கள்!!

55
Side Effects of Mouthwash in tamil

Side Effects of Mouthwash in tamil

சர்க்கரை நோய்:

பல ஆய்வுகளின் படி, ஒரு நாளைக்கு 1-2 மேல் மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண்டறிந்துள்ளன. இதற்கு மவுத்வாஷில் இருக்கும் சில ரசாயன பொருள்கள் தான் காரணம். அவை இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. இன்சுலின் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன். எனவே இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும்போது சர்க்கரை நோய் வரும்.

நினைவில் கொள்:

நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டாம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட பல் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
வாய் சுகாதார குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved