MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Copper Vessel Cleaning: செப்புப் பாத்திரங்கள் கருப்பா ஆகிடுச்சா? இந்த 5 சீக்ரெட் கிச்சன் டிப்ஸ் போதும்.! புதுசு மாதிரி ஜொலிக்கும்.!

Copper Vessel Cleaning: செப்புப் பாத்திரங்கள் கருப்பா ஆகிடுச்சா? இந்த 5 சீக்ரெட் கிச்சன் டிப்ஸ் போதும்.! புதுசு மாதிரி ஜொலிக்கும்.!

Copper Vessel Cleaning: செப்புப் பாத்திரங்களில் படியும் கருமை மற்றும் கறைகளை நீக்க, விலை உயர்ந்த கெமிக்கல்கள் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அவற்றை மீண்டும் புதுசு போல பளபளக்க வைக்க முடியும். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 20 2026, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Copper Vessel Cleaning
Image Credit : our own

Copper Vessel Cleaning

வீடுகளில் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. உடல் நலத்திற்காக செப்புக் குடத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் பழக்கம் பல தலைமுறைகளாகத் தொடர்கிறது. ஆனால், நாளாக ஆக இந்தக் செப்புப் பாத்திரங்கள் கறுத்து, பச்சை நிறப் படிவம் பிடித்துப் போய்விடுவதைப் பார்த்திருப்போம். இதற்காக விலை உயர்ந்த கெமிக்கல்களை வாங்கிப் பணத்தை செலவழிக்கத் தேவையில்லை. உங்கள் சமையலறையிலேயே இதற்கான தீர்வு இருக்கிறது.

இதையும் படியுங்கள் - சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எலுமிச்சை மற்றும் உப்பு
Image Credit : our own

எலுமிச்சை மற்றும் உப்பு

செப்புப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கான மிக பயனுள்ள வழி எலுமிச்சையும் உப்பும் தான். ஒரு எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதன் மீது கல் உப்பைத் தொட்டு, பாத்திரத்தின் மீது மெதுவாகத் தேய்த்தால் போதும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் கருமையையும், உப்பு கறைகளையும் நீக்கிவிடும். தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவினால், பாத்திரம் பளிச்சிடும்.

இதையும் படியுங்கள் -  ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?

Related Articles

Related image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Related image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
36
வினிகர் மற்றும் சமையல் சோடா கலவை
Image Credit : our own

வினிகர் மற்றும் சமையல் சோடா கலவை

ரொம்ப நாட்களாக சுத்தம் செய்யப்படாத, அதிக அழுக்கு படிந்த பாத்திரங்களுக்கு வினிகர் மற்றும் சமையல் சோடா கலவை சிறந்த பலனைத் தரும். இரண்டையும் கலந்து பேஸ்ட் போல ஆக்கி, பாத்திரம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் விட்டுவிடவும். பின்னர் மென்மையான துணியால் தேய்த்துக் கழுவினால், அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால், ஸ்டீல் ஸ்கிரப்பர் போன்ற கடினமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம், அது பாத்திரத்தின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்திவிடும்.

இதையும் படியுங்கள் - வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்? அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.! சரியான அளவை தெரிஞ்சிக்கோங்க.!

46
ஊறவைத்த புளி
Image Credit : stockPhoto

ஊறவைத்த புளி

அடுத்ததாக, நம் பாரம்பரிய சமையலில் இடம்பிடிக்கும் புளி, பிடிவாதமான கறைகளை நீக்குவதில் கில்லாடி. சிறிதளவு புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அந்த விழுதை பாத்திரத்தின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, மென்மையான ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்தால், பல நாள் கறையும் காணாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள் - இன்னும் 7 நாட்களில் 5 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.! வேலை, பணம், ஆரோக்கியம் எல்லாம் டேஞ்சர்.!

56
கோதுமை மாவு, உப்பு, வினிகர் கலந்த பேஸ்ட்
Image Credit : social media

கோதுமை மாவு, உப்பு, வினிகர் கலந்த பேஸ்ட்

இதேபோல, கோதுமை மாவு, உப்பு, வினிகர் கலந்த பேஸ்ட்டும் ஒரு சிறந்த இயற்கை பாலிஷ் போல செயல்படும். இந்த பேஸ்ட்டை தடவி 15 நிமிடங்கள் கழித்துத் துடைத்தால், பாத்திரம் புதுசு போல மின்னும். லேசான மங்கலான நிறத்திற்கு, தக்காளிச் சாற்றைத் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் -  அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

66
தினசரி பராமரிப்பும் முக்கியம்
Image Credit : stockPhoto

தினசரி பராமரிப்பும் முக்கியம்

செப்புப் பாத்திரங்கள் எப்போதும் பளபளப்பாக இருக்க, தினசரி பராமரிப்பு அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், வெதுவெதுப்பான நீரில் லேசான சோப் கொண்டு கழுவி, உடனடியாக உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண்டும். ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்வதே, பாத்திரங்கள் விரைவில் கறுப்பதைத் தடுக்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டுச் செப்புப் பாத்திரங்கள் பல ஆண்டுகள் அதன் பொலிவை இழக்காமல் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமையலறை குறிப்புகள்
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Recommended image2
Water Tank Cleaning: வாட்டர் டேங்கை சிரமமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்ய 'ஸ்மார்ட்' டிப்ஸ்!
Recommended image3
மழை பெய்தாலே பஜ்ஜி சாப்பிட தோணுதா? ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Recommended image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved